in

கூலி பட காட்சி இணையத்தில் லீக்.. அதிர்ச்சியில் லோகேஷ்

கூலி பட காட்சி இணையத்தில் லீக்.. அதிர்ச்சியில் லோகேஷ்

நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கி வரும் கூலி படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ் ,ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்து வருகிறார்கள், இப்படத்தை எல்லா மொழிகளிலும் வெளியிட திட்டமிடிருக்கும் லோகேஷ் அந்தந்த மொழியின் முன்னணி கதாநாயகர்களை படத்தில் நடிக்க வைக்கஇருக்கிறார், ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாகார்ஜுனா சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது தற்பொழுது வைரலாகி வரும் இந்த வீடியோவில் வெள்ளை நிற கோட்டில் நாகர்ஜுனா வெறித்தனமாக டயலாக் பேசுவது போல் நடித்திருக்கிறார்.

அப்டேட் கேட்ட ரசிகர்களுககாக சமீபத்தில் ஓணம் வீடியோவை படகுழுவினர் வெளியிட்ட நிலையில், இந்த வீடியோ வெளியானதை பார்த்து லோகேஷ் கனகராஜ் அதிர்ந்த வெளியிட்டுள்ள அறிக்கையில், பல தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு உருவாக்கியததை யாரோ ஒருவர் திருட்டுத்தனமாக படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டது என்னை வருத்ததீற்கு உள்ளாக்கி இருக்கிறது, எத்தனை பேரின் உழைப்பை வீணாக்கி விட்டீர்கள் இது போன்ற செயல்களில் இனி யாரும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று போஸ்ட் செய்துள்ளார்

What do you think?

மைக்கை தூக்கிட்டு கேள்வி கேட்க வராதிங்க….கோபமாக… விஜய் டிவி புகழ்

கொடைரோடு அருகே டைம் எடுப்பதில் தகராறு நடு ரோட்டில் பேருந்தை நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட தனியார் பஸ் ஊழியர்களால் பரபரப்பு