கொடைரோடு அருகே டைம் எடுப்பதில் தகராறு நடு ரோட்டில் பேருந்தை நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட தனியார் பஸ் ஊழியர்களால் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே தனியார் பேருந்துகளுக்கு இடையே டைம் எடுப்பதில் தகராறு காரணமாக நடுரோட்டில் பேருந்து நிறுத்திவிட்டு பஸ் ஊழியர்கள் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி அடுத்தடுத்து கிளம்பிய இரண்டு தனியார் பேருந்துகள் டைம் எடுப்பதில் தகராறு காரணமாக ஒன்றன்பின் ஒன்று முந்துவதில் வேகம் காட்டி வந்தனர்
மதுரை திண்டுக்கல் சாலையில் கொடைரோடு அருகே அம்மைய நாயக்கனூர் காவல் நிலையம் அருகே இரண்டு பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக வேகம் எடுத்து வந்த நிலையில் பின்னால் வந்த தனியார் பேருந்துக்கு ஆதரவாக அதே நிறுவனத்தைச் சேர்ந்த எதிரே வந்த தனியார் பேருந்து திடீரென சாலையை மறைத்து நின்றதால் பேருந்துகள் மூன்றும் ஒன்றோடு ஒன்று மோதும் சூழ்நிலை உருவானது
இதனால் மூன்று பேருந்துகளிலும் இருந்த பயணிகள் பதட்டம் அடைந்த இந்நிலையில் தனியார் பேருந்து நடத்துனர் ஓட்டுனர்கள் இடையே கடும் தகராறு ஏற்பட்டது பேருந்துகளை சாலையில் நிறுத்திவிட்டு பஸ் ஊழியர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது இதனைத் தொடர்ந்து பேருந்து பயணிகளும் அருகே இருந்த கிராமத்து பொதுமக்களும் பஸ் ஊழியர்களை கண்டித்து பேருந்துகளை அப்புறப்படுத்தினர்
மதுரை திண்டுக்கல் மார்க்க சாலையில் தனியார் பேருந்துகளுக்கு இடையே டைம் எடுப்பதில் தகராறு அடிக்கடி ஏற்படுவதாகவும் இதனால் பேருந்து பயணம் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.