புதுச்சேரியில் குப்பை அள்ளும் தனியார் நிறுவனத்தோடு கைகோர்த்துக்கொண்டு ஊழல் செய்யும் நகராட்சி அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று புதுச்சேரி திமுக வலியுறுத்தி உள்ளது
புதுச்சேரி மாநில தி.மு.க. செயற்குழுக் கூட்டம் புதுச்சேரி தலைமை அலுவலகத்தில் மாநில கழக அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.
திமுக மாநில அமைப்பாளர் சிவா உள்ளிட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் ஜூன் 3-ந் தேதி கலைஞரின் 101–வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது,புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முகவர்கள் செல்வது சம்பந்தமாக ஆலோசனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில அமைப்பாளர் சிவா….
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுவதற்கு புதுச்சேரி திமுக சார்பாக மிக சிறப்பான ஏற்பாடு செய்துள்ளது.
பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது தவறு நடைபெறாமல் கண்காணிக்கும் வகையில் முகவர்களை தயார் செய்து இருக்கிறோம்..
திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது தமிழகத்தை சேர்த்து 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று குறிப்பிட்டார்.
புதுச்சேரியில் குப்பை அள்ளும் தனியார் நிறுவனத்துடன் நகராட்சி அதிகாரிகள் கைகோர்த்துக்கொண்டு ஊழலில் ஈடுபட்டுள்ளனர். எந்த நோக்கத்திற்காக குப்பை அள்ளும் பணி தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை என்று குற்றம் சாட்டிய சிவா…
நகர பகுதியில் உள்ள வாய்க்கால்கள் சுத்தம் செய்யப்படவில்லை குப்பைகள் சரியாக அள்ள படவில்லை குப்பை அள்ளும் பணிகள் ஊழல் நடந்துள்ளது.
அந்த நிறுவனத்திற்கு சேர வேண்டிய நிதி கோப்புகளை ஆளுநர் நிறுத்தி வைத்தது என்பது வரவேற்கக் கூடியது என்றும் குப்பை அள்ளும் தனியார் நிறுவனத்தோடு கைகோர்த்துக்கொண்டு ஊழல் செய்யும் நகராட்சி அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என சிவா வலியுறுத்தினார்.