மகிழவும் முடியவில்லை … வருந்தவும் முடியவில்லை… விஜய் அரசியல் பிரவேசம் குறித்து நடிகர்
எம்ஜி.ஆர்., விஜயகாந்த் அவர்களுக்கு பிறகு புரட்சிகரமான கருத்துக்களால் மக்களிடையே புரட்சியை தன் படத்தின் மூலம் ஏற்படுத்தியவர் தளபதி விஜய்.
சினிமாத் துறையில் உச்சத்தில் இருக்கும் போதே விஜய் அவர்கள் தற்பொழுது அரசியலிலும் கால் பதித்திருக்கிறார், இவரின் அரசியல் பிரவேசத்திற்கு பல அரசியல் தலைவர்களும் திரை துறையினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்த நிலையில் பார்த்திபன் அவர்களும் தன் பாணியில் வாழ்த்து கூறி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யாவது விஜய்யின் கட்சிக்கு பின்புலமாய் உள்ள அர்ப்பணிப்பு ஆச்சரியம் அளிக்கிறது. 100 கோடிக்கு மேல் சன்மானம் பெறும் விஜய் 100 கோடிக்கு மேல் ஜனத்தொகை கொண்ட இந்திய அரசியலில் தன் வருமானத்தை தியாகம் செய்துவிட்டு மக்களின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
இவரின் இந்த அரசியல் பணி பாராட்டுக்குரியது, சிஎம் போட்டிக்குள் நுழையும் ஆக்சன் அதிரடியாக உள்ளது, முழு நேரமாக அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சினிமா துறையை விட்டு விலகிய இவரின் தியாகம் உள்ளத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
அதனால் முற்றும் துறந்த முனிவரைப்போல் விஜய் தன் நடிப்பு சாம்ராஜியத்தின் நவரத்தின கிரிடத்தை கழட்டி வைத்து விட்டதை நினைக்கும் போது மனம் சங்கடம் அடைகிறது.
அவர் மீது உயிரே வைத்திருக்கும் ரசிகர்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன் அரசியல் ஒரு சூரசம்ஹார சூட்சுமம் என்பதை அறிந்து எப்போதும் பேசாமல் அமைதியை தன் அடையாளமாகக் கொண்ட விஜய் அரசியல் களத்தில் எப்படி சமாளிப்பார் என அவர் மீது உள்ள அக்கறையாலும் நாம் யோசித்தாலும் அவர் சாமர்த்தியமாக ஆலோசனை செய்து விட்டு தான் அரசியலில் முழுமூச்சில் இறங்கி இருப்பார் என்றும் தோன்றுகிறது.
மக்கள் பணிக்காக ஹீரோவாக தன்னை உயர்த்திய விஜய்யை’ நெஞ்சார வாழ்த்துகிறேன் அவர் பணி சிறக்கட்டும் என்று பார்த்திபன் அவர்கள் மனம் திறந்து தன் ஆதங்கம் கலந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.