நாட்டின் முதல் AI ஆசிரியர் கேரளாவில் அறிமுகம்
கேரள மாநிலத்தில், தொfsu jersey keyvone lee jersey fsu jersey penn state jersey brandon aiyuk jersey penn state jersey miami hurricanes jersey keyvone lee jersey penn state jersey aiyuk jersey penn state jersey brandon aiyuk jersey miami hurricanes jersey purdy jersey aiyuk jersey ழில்நுட்ப வளர்ச்சியான செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் ஏஐ ஆசிரியரை உருவக்கியுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு (AI) நமது சமூகத்தின் பல்வேறு அம்சங்களை முற்றிலும் மாற்றி வடிவமைக்கும் ஆற்றலைக் கொண்ட ஒரு சிறப்பான தொழில்நுட்பமாகும். இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பல்வேறு துறைகளில் அதிக வேகமாக நடந்து வருகிறது.
இந்த தொழில்நுட்பத்தால் மனிதர்களை போல சிந்திக்கவும், பகுப்பாய்வு செய்யவும் மற்றும் செயல்படவும் முடியும் என கூறப்படுகிறது. AI கருவிகளின் உதவியுடன் மக்களை கவரும் விதமாக படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கபடுகின்றன. காலப்போக்கில், இது நம் வாழ்வின் குறிப்பிடத்தக்க தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில், அமெரிக்காவில் 18 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை செயற்கை நுண்ணறிவு (AI) பேச உதவியுள்ளது. இந்நிலையில், இது மருத்துவ துறையில் மிக பெரிய அதிசயமாக பார்க்கப்படுகிறது. இது போன்ற பல துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது பல வித்தயாசமான அதிசயங்களை படைத்துள்ளது. இப்போது, கேரளாவில் உள்ள ஒரு பள்ளி, கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தவும், கற்றலை சிறப்பாக்கவும், மாணவர் ஈடுபாட்டை அதிகரிக்க AI தொழில்நுட்பத்தை தேர்வு செய்துள்ளனர்.
கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள, கடுவாயில் தங்கல் அறக்கட்டளையின் KTCT மேல்நிலைப் பள்ளியில் ஒரு புதிய முயற்சியாக கடந்த மாதம் AI ஆசிரியர் அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த கல்வி நிறுவனம் மேக்கர்லேப்ஸ் எடுடெக் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து “ஐரிஸ்” என்ற ஏஐ ஆசிரியரை உருவாக்கியது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் இந்தியாவின் முதல் AI ஆசிரியர் ரோபோ இது என்ற பெருமையை பெற்றுள்ளது.
இது KTCT மேல்நிலைப் பள்ளியில் AI ஆசிரியர் ரோபோ தொடங்கப்பட்ட பிறகு, தொழில்நுட்ப நிறுவனம் தனது சமுக வலைதளத்தில் அந்த AI ஆசிரியர் பற்றிய ஒரு வீடியோ பதிவை பகிர்ந்துள்ளது.
இதில், இந்த ரோபோவால் மூன்று வெவ்வேறு மொழிகளில் தொடர்பு கொள்ள முடியும் மற்றும் கடினமான கேள்விகளுக்கும் இந்த ரோபோவால் பதிலளிக்க முடியும் என தெரிவித்தனர். AI ஆசிரியரான ஐரிஸின் தனிப்பட்ட குரல் உதவி, கையாளுதல் திறன்கள் மற்றும் மாணவர்களுக்குச் சுலபமாகக் கற்பித்தல் ஆகிய தனிபட்ட திறமைகளுடன் இந்த செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் நகர்வை செயல்படுத்த சக்கரங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவால் கல்வித்துறையில் பல மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் மாணவர்கள் கற்றலை மிகவும் ஈடுபாட்டுடன் அணுகக்கூடியதாக மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருங்காலத்தில் இனி ஆசிரியர்களுக்கு பதிலாக AI ரோபோக்கள் பாடம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் பல்வேறு விஷயங்களில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் மனிதர்களுக்கு பெரும் நன்மையை ஏற்படுத்த போகும் என்பதை உணர்ந்து, இப்போதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக இதற்கு நம்மை தயார் செய்துகொள்வோம்.