கவுண்டமணி நிலத்தை… ஒப்படைக்க …தனியார் நிறுவனம்… கோர்ட் உத்தரவு
சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு ரோட்டில் நளினி பாய் என்பவருக்கு சொந்தமான ஐந்து கிரவுண்ட் நிலத்தை நடிகர் கவுண்டமணி 1996 ஆம் ஆண்டு வாங்கியுள்ளார்.
பின்னர் இதில் 22,000 700 சதுர அடிக்கு வணிகவலம் கட்ட கவுண்டமணி அபிராமி பவுண்டேஷன் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைத்தார். இதற்காக அவர்களுக்கு 3.58 கோடி தவணை முறையில் வழங்கப்பட்டது.
முதல் கட்டமாக 1 கோடி ரூ.4 லட்சம் கவுண்டமணி வழங்கினார். ஆனால் 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு கட்டுமான பணிகள் தொடங்கவில்லை எனக் கூறி நிறுவனத்திற்கு எதிராக கவுண்டமணி வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் அந்த நிறுவனமோ இந்த நிலத்தின் சொந்தக்காரரான நளினி பாயிடம் இருந்து அந்த நிலத்தை கவுண்டமணி குடும்பத்திற்கு வாங்கிக் கொடுத்ததே நாங்கள் தான் அந்த நிலத்திலிருந்து ரூபாய் 1.4 கோடியே செலவு செய்து அங்கு வாடகை இருந்தவர்களை காலி செய்ய கொடுத்ததாகவும், வணிக வளாக பணிக்கு தொடங்க அனுமதி பெறவும் அதை செலவு செய்ததாகவும் எஞ்சி இருந்த தொகையை கட்டுமான பணி தொடங்க செலவு செய்தோம் என்று விளக்கம் அளித்தனர்.
மேலும் அந்த நேரத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதால் கவுண்டமணி எங்களுக்கு பாக்கித்தொகையை தரவில்லை எனவே அந்த நிலத்தை பாதுகாத்து வரும் எங்களுக்கு நஷ்ட ஈடாக ரூபாய் 40 கோடி கவுண்டமணி வழங்க வேண்டும் என்று அந்த நிறுவனத்தின் சார்பாக கோர்ட்டில் வாதிடப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி அந்த நிலத்தை ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டார், நிறுவனத்தின் சார்பாக 46.51 லட்சம் மட்டுமே பணிகள் நடைபெற்ற செலவு செய்தார்கள் என்று அறிக்கை வெளியிடபட்டது.
2019 ஆம் ஆண்டு நீதிபதி பிறப்பித்த உத்தரவில் வணிக வளாக கட்டுமான பணிகள் விரைவில் முடிக்க கூடுதலாகவே 63 லட்சத்தை கவுண்டமணி அந்த நிறுவனத்திற்கு கொடுத்திருக்கிறார், எனவே பணிகளை முழுமையாக முடித்து தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது மீதி இருக்கும் 5 கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை அந்நிறுவனம் கவுண்டமணியிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.