in

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை நிறுவ கோர்ட் உத்தரவு


Watch – YouTube Click

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை நிறுவ கோர்ட் உத்தரவு

 

திருச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை நிறுவ கோர்ட் உத்தரவு -திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் நேரில் ஆய்வு.

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, திருச்சியில் ஒரு சிலை நிறுவ வேண்டும் என்ற சிவாஜி ரசிகர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, திருச்சி மாநகராட்சியில் சிலை அமைப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப் பட்டு திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில், 2011 -ல் 9 அடி உயர சிவாஜி கணேசன் சிலை நிறுவப்பட்டது.

அவரது சிலை அதே இடத்தில் சாக்குப் பையால் மூடப்பட்ட நிலையில் கடந்த 13 ஆண்டுகளாக இருந்தது. இதற்கிடையில், சிலையை திறக்க வேண்டும் என்று, மதுரை உயர்நீதிமன்றத்தில் திருச்சியை சேர்ந்த மோகன் பாலாஜி என்ற ரசிகர் தொடர்ந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சிலை நிறு வப்பட்டிருக்கும் சாலையில் சிலையைத் திறக்க அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு பதில் அளித் துள்ளது.

மதுரை உயர்நீதி மன்றம் அளித்த உத்தரவில், சிவாஜி கணேசன் சிலையை இப்போது நிறுவப்பட்டிருக்கும் இடத்திலிருந்து அகற்றி, வேறொரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நிறுவ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

எனவே, திருச்சியில், வேறொரு முக்கிய சந்திப்பில், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் சிவாஜி கணேசன் சிலையை வைக்கலாம் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இன்று திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதராஜ் பாலக்கரையில் அமைந்துள்ள சிவாஜி கணேசன் சிலை இருக்கும் பகுதியை ஆய்வு மேற்கொண்ட பிறகு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் சிவாஜி சிலை அமைக்க உடனே நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு அளித்தார்..


Watch – YouTube Click

What do you think?

சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதித்து வனத்துறை உத்தரவு

திருவண்ணாமலை மகிளா நீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பு…மருமகள் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள்தண்டனை…