தென்காசி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் குற்றால அருவிகள் பாறைகளாக காட்சியளிப்பதுடன், பெயரளவிற்கு வழியும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் தலையை நனைத்த வண்ணம் செல்கின்றனர்
தென்காசி மாவட்டத்தில் அருவிகளின் நகரம் என போற்றப்படும் குற்றாலத்தில் மெயின் அருவி, பழைய குற்றாலம் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகள் உள்ளது. குற்றாலத்தை பொருத்தவரை ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் என்பது தென்றல் தவழும் காற்றுடன் ஆர்ப்பரிக்கும் தண்ணீர் கொட்டப்பட்டு குற்றால சீசன் துவங்கப்படும்.
தற்போது மழைப்பொழிவு இல்லாததன் காரணமாகவும், கோடை வெயில் கொளுத்துவதன் காரணமாகவும் அருவிகளில் தண்ணீர் வரத்து இன்றி காணப்படுகிறது. முற்றிலுமாக தண்ணீர் வரத்து குறைந்த நிலையில் குற்றாலம் மெயின் அருவி பாறைகளாக காட்சியளிக்கும் நிலையில் பெயரளவிற்கு தண்ணீர் வடிந்து வருகிறது. இந்த நிலையில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் அருவிகளில் வடியும் தண்ணீரிலும் சுற்றுலா பயணிகள் தலையை நனைத்த வண்ணம் செல்கின்றனர்.