நெல்லை பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் கோ பூஜை
தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி நெல்லை பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் கோ பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பசுவிற்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வைணவர்ஸ் தளங்களில் ஒன்றான நெல்லை பாளையங்கோட்டை அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு மாத பிறப்பின் போதும் சுவாமி முன்பு கன்றுடன் பசு நிறுத்திவைக்கப்பட்டு விஸ்வரூப தரிசனத்துடன் கூடிய கோபூஜை நடைபெறும். தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி விஸ்வாவசு ஆண்டு தொடக்கத்தின் முதல் மாதமான சித்திரை மாத பிறப்பை ஒட்டி சிறப்பு கோ பூஜை வழிபாடு நடைபெற்றது.
அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருட சன்னதி முன்பு கன்றுடன் பசு நிறுத்தி வைக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற கோ பூஜையில் பசுவிற்கு புதிய வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு உலக நன்மை வேண்டியும் இந்த ஆண்டு சிறப்புடன் அமைய வேண்டியும் பிரார்த்தனை செய்து சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
பின்னர் பசுவிற்கு அரிசி வெள்ளம் உள்ளிட்ட உணவு வகைகள் கொடுக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்ததுடன் பசுவிற்கும் அகத்திக்கீரை அரிசி வெல்லம் உள்ளிட்டவர்கள் கொடுத்து வழிபாடு நடத்தினர்.