சிபிஐ எம் எல் கட்சியினர் பல்வேறு பொறுப்புகள் வலியுறுத்தி திடீர் சாலை மறியல்
பாபநாசம் அருகே சிபிஐ எம் எல் கட்சியினர் பல்வேறு பொறுப்புகள் வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது… சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில்
சிபிஐ எம் எல் கட்சியினர் மக்களின் நீண்ட கால கோரிக்கையான கபிஸ்தலம் கடை தெருவில் கழிப்பறை மற்றும் நிழற்குடை அமைக்கவும், கபிஸ்தலம் கடைத்தெரு பகுதிகளில் ஆக்கிரப்புகளை அகற்றி சாலை விரிவாக்க பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் பாபநாசம் ஒன்றிய செயலாளர் பிரபு தலைமையில் நடைபெற்றது.
இந்த இந்த மறியல் போராட்டத்தில் மாவட்ட செயலாளர் கண்ணையன், மாநில குழு உறுப்பினர் மாசிலாமணி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் செல்லத்துரை, ஒன்றிய குழு உறுப்பினர் சத்யா மற்றும் பெண்கள் , சிறுவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் விடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது…*!