in ,

வத்தலகுண்டு அருகே தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

வத்தலகுண்டு அருகே தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

 

வத்தலகுண்டு அருகே தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் நள்ளிரவில் நடந்த விநோத திருவிழா நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ளது அழகாபுரி கிராமம் இந்த கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலட்சுமி கோவில் ஆடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

பாரம்பரிய வழக்கப்படி நள்ளிரவில் நடக்கும் இந்த திருவிழாவில் முதல் நிகழ்வாக அம்மன் கரகம் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று முளைப்பாரி எடுத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து திருவிழாவில் முக்கிய நிகழ்வான தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கிராமத்தில் அமைந்துள்ள கங்கை கிணற்றின் அருகே வரிசையாக அமர்ந்திருந்த பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

இந்த விநோத திருவிழாவில் திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

நாமக்கல் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில் காசி விஸ்வநாதர் கோவில் ஆடி பெருக்கை முன்னிட்டு மோட்ச தீபம்

ஆடி அமாவாசை நிலக்கோட்டை அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு