in

நத்தம் அருகே கோபால்பட்டி சுற்று பகுதியில் திடீர் வெடிச்சத்தத்தால் கட்டிடங்களில் விரிசல்


Watch – YouTube Click

நத்தம் அருகே கோபால்பட்டி சுற்று பகுதியில் திடீர் வெடிச்சத்தத்தால் கட்டிடங்களில் விரிசல்

நத்தம் அருகே கோபால்பட்டி சுற்று பகுதியில் திடீர் வெடிச்சத்தத்தால் கட்டிடங்களில் விரிசல், பொதுமக்கள் அதிர்ச்சி.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோபால்பட்டி அருகேயுள்ள கே.அய்யாபட்டி, வேம்பார்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் காலை திடீரென பயங்கர வெடிச்சத்தம் உணரப்பட்டது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து உடனடியாக வெளியேறினர். சிறிது நேரத்திற்கு பின்னர் மீண்டும் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் சென்றபோது கட்டிடங்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபோன்ற பயங்கர வெடிச்சத்தம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உணரப்பட்டதாகவும், அது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை எந்த ஒரு தகவலும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என குற்றம் சாட்டினர். தற்போது உணரப்பட்ட இந்த வெடிச்சத்தம் குறித்து மாவட்ட புவியியல் துறை ஆய்வு நடத்தி மக்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடிக்கடி இது போன்று நடக்கும் வெடிசத்தத்தால் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பலி

ஓஎன்ஜிசி எரிவாயுக் கசிவை சரிசெய்வதற்கான பராமரிப்புப்பணி இன்று தொடங்கியது