தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் சிவகாந்தி ராஜன் தலைமையில் பல்வேறு பணிகளை பார்வையிட்டு கூட்டுறவு வேளான்மை வங்கி மூலமாக மகளிர் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கினர்
மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதிகளில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, சட்டமன்ற பேரவை முதன்மை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் மதிப்பீட்டு குழு தலைவர் காந்திராஜன் தலைமையில்,மதிப்பீட்டு குழு உறுப்பினர்கள், இராம கருமாணிக்கம், டாக்டர் தி.சதன்,திருமலை குமார் சுதர்சனம்,சேவூர் இராமசந்திரன், வழக்கறிஞர் பண்ணீர் செல்வம், O.S.மணியன், SP வெங்கடேசன்,இராஜா, ஆகிய சட்டமன்ற உறுப்பினர்களும், மயிலாடுதுறையில் உள்ள அய்யன்குளம் மேம்பாடு பற்றி ஆய்வு செய்தனர்.
பின் நீடூர் தொடக்க வேளான்மை வங்கியில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி தொகை வழங்கி வேளான்மை வங்கியை ஆய்வு செய்தனர்.பின் அங்கு கூடியிருந்த மகளிரிடம் அங்காடியில் உள்ள குறைகளை பற்றி கேட்டருந்தனர்.அடுத்து சீர்காழி பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டனர்.அவர்களுடன் அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.