தண்ணீர் வறட்சியின் காரணமாக நள்ளிரவில் கிராமத்திற்குள் படையெடுக்கும் முதலைகள்
வீட்டுக்குள் புகுந்த முதலையால் நள்ளிரவில் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், 8 நீளமும் 120 கிலோ எடை கொண்ட முதலையை வனத்துறையினர் பாதுகாப்பாக பிடித்து சென்றனர், அதேபோன்று சாலை ஓரத்தில் கிராமத்தில் இருந்த முதலையும் வனத்துறையினர் பிடித்தனர்.
தண்ணீர் வறட்சியின் காரணமாக நள்ளிரவில் கிராமத்திற்குள் படையெடுக்கும் முதலைகள் கிராம மக்கள் அச்சம் இரண்டு முதலைகளை பிடித்து சென்ற வனத்துறையினர்.
சிதம்பரம் அருகே மேல்தவித்தாம்பட்டு கிராமத்தில் செல்வகுமார் என்பவரது வீட்டில் சுமார் 8 அடி நீளமும் 120 கிலோ எடை கொண்ட முதலை ஒன்று நேற்று நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்துள்ளது, வீட்டில் இருந்தவர்கள் இயற்கை உபாதை கழிக்க வெளியே வந்த போது முதலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர், உடனடியாக அவர்கள் சிதம்பரம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வானவர் பிரபு தலைமையில் அங்கு சென்ற வனத்துறையினர் முதலையை பத்திரமாக மீட்டு வக்கராமரி ஏரியில் விட்டனர்.
அதனைத் தொடர்ந்து கண்ணங்குடி கிராமத்தில் சாலை ஓரத்தில் முதலை இருப்பதாக மீண்டும் வனத்துறையினருக்கு தகவல் வரவே அங்கு சென்ற வனத்துறையினர் 6 அடி நீளமும் 50 கிலோ எடை மதிக்கத்தக்க முதலையைப் பிடித்து அதையும் பாதுகாப்பாக வக்கராமரி ஏரியில் விட்டனர், நள்ளிரவில் இரண்டு கிராமத்தில் புகுத்த முதலைகலால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தற்போது வெப்பம் அதிகரித்து வருவதாலும் வாய்க்கால்கள் குளங்கள் தண்ணீர் இன்றி வறட்சி ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து வெளியேறும் முதலைகள் இதுபோன்று கிராம பகுதிகளுக்குள் ஊடுருவி வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர், எனவே கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தல் செய்துள்ளனர்.