in

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதுச்சேரி மார்க்கெட் வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதுச்சேரி மார்க்கெட் வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

புதுச்சேரி பெரிய மார்க்கெட், நேரு வீதி, மற்றும் பாரதி வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதல். மண்பிள்ளையார், காகித பிள்ளையார் என ஒரு அடி முதல் 12 அடி வரை விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனை வைக்கப்பட்டுள்ளது.

மண் பிள்ளையார் ஒன்றரை அடி விநாயகர் 100 ரூபாயிலிருந்து 700 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

காகித பிள்ளையார் 5 அடி ஆறாயிரம் ரூபாய் முதல், 12 அடி 16 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது…

விநாயகர் குடை 10 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை.

விநாயகருக்கு பழ வகைகள், பூக்கள் மற்றும் பலவிதமான குடைகள் விற்பனைக்கு வைப்பு…

அதேபோல் புதுசேரி விநாயகர் சதுர்த்தி பேரவை சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்ய ஏற்பாடு செய்து வருகிறது.

இந்தாண்டு, பேரவை சார்பில், 150 விநாயகர் சிலைகள் புதுச்சேரி முழுவதும் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

What do you think?

மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய ரூபாய் 46.16 கோடி- அமைச்சர் லட்சுமி நாராயணன்

போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவு