லிப்டில் மாட்டிக்கொண்ட கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்ட தீயணைப்பு துறையினர்
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது இதில் கலந்து கொள்வதற்காக கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் அவர்கள் வருகை புரிந்த போது இரண்டாம் தளத்தில் உள்ள
கூட்டம் நடைபெறும் மினி ஹாலுக்கு செல்ல தரைதளத்தில் உள்ள லிப்டில்
ஏறியுள்ளார்
இந்நிலையில் திடீரென லிப்ட் பழுதானதால் கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் மற்றும் அவருடன் லெப்ட்ல இருந்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளான திலகர், ரமேஷ் ,கிருஷ்ணாதாஸ், கோதண்டபாணி உள்ளிட்டோர் லிப்டினுள் மாட்டிக் கொண்டனர்
பின்னர் சம்பவம் குறித்து குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி லிப்டில் மாட்டிக் கொண்ட கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் உடனிருந்த நான்கு நபர்களை பத்திரமாக மீட்டனர்
செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் லிப்டில் மாட்டிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது