in

திருப்பதி டூ பழனி இனிமேல் தினமும் நேரடி பேருந்து போக்குவரத்து

திருப்பதி டூ பழனி இனிமேல் தினமும் நேரடி பேருந்து போக்குவரத்து

 

மங்களகிரியில் இருந்து கொடியசைத்து துவங்கி வைத்தார் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.

கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் ஆன்மீக யாத்திரை மேற்கொண்ட ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பழனிக்கு சென்று இருந்த போது, இதற்கு முன் பழனி, திருப்பதி இடையே ஆந்திர மாநில போக்குவரத்து கழக பேருந்து ஓடிக்கொண்டிருந்தது.

கொரோனா காலத்தில் பழனி, திருப்பதி இடையே நேரடி பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் பின் அது தொடரவில்லை என்று அங்குள்ள பொதுமக்கள் அவரிடம் கூறினர்.

விரைவில் உங்கள் கோரிக்கையை ஏற்று திருப்பதி பழனி இடையே பேருந்து போக்குவரத்து துவக்கப்படும் என்று அப்போது பவன் கல்யாண் கூறி இருந்தார்.

அதன் அடிப்படையில் இன்று திருப்பதியில் இருந்து பழனிக்கு ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து போக்குவரத்து துவங்கியது.

அதை மங்களகிரியில் இருந்து காணொளி மூலம் கொடியசைத்து துவக்கி வைத்தார் துணை முதல்வர் பவன் கல்யாண்.

இனிமேல் தினமும் இரவு 8 மணிக்கு திருப்பதியில் தொடங்கி பழனிக்கு காலை 7 மணிக்கும் ,பழனியில் இரவு 8 மணிக்கு தொடங்கி காலை 7 மணிக்கு திருப்பதிக்கும் ஆந்திர மாநில போக்குவரத்து கழக பேருந்து பயணிக்கும்.

பழனி திருப்பதி இடையே போக்குவரத்து கட்டணம் பெரியவர்களுக்கு ₹ 480 ஆகவும் சிறியவர்களுக்கு ₹ 360 ஆகவும் இருக்கும்.

What do you think?

மொழையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஆலய கும்பாபிஷேகம்

காளஹஸ்தி கோவிலில் நடிகை பூஜா ஹெக்டே வழிபாடு