இன்றைய முக்கிய செய்திகள் | புதுவையின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (01.07.2024)
புதுச்சேரி..காவல் துறையினரும் காவல் துறையினரும் நீதிமன்றங்களும் இணைந்து செயல்பட்டால் நீதி விரைந்து கிடைக்கும்…புதிய சட்டங்களை அமல்படுத்தும் விழாவில் முதல்வர் ரங்கசாமி பேச்சு…
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி) குற்றவியல் நடைமுறை சட்டம் (சி.ஆர்.பி.சி) இந்திய சாட்சிகள் சட்டம் (ஐ.இ.சி) ஆகிய சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பி. .என். எஸ்) பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ். எஸ்) பாரதிய சாட்சிய அதிநியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
கடந்தாண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த புதிய சட்டங்களுக்கான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் இந்த சட்டங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பிறகு அரசிதழில் கடந்த டிசம்பரில் வெளியானது.இந்த நிலையில் மூன்று குற்றவியல் சட்டங்களும் இன்று முதல் அமலுக்கு வந்தன. இதனை ஒட்டி புதிய சட்டங்கள் குறித்த நாடு முழுவதும் சுமார் 5.65 லட்சம் போலீசார், சிறை, தடயவியல், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் சுமார் 40 லட்சம் தன்னார்வலர்களுக்கு பயிற்சிகள் அளித்து தயார் படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு மும்மரமாக ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் இன்று கதிர்காமம் அரசு மருத்துவமனை கருத்தரங்க கூடத்தில் புதிய சட்டங்களுக்கான அறிமுக விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டார்.
புதிய மூன்று சட்டங்களை அறிமுகப்படுத்தி வைத்து நிகழ்ச்சிகள் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி,பாலியல், கொலை, கொள்ளை, உள்ளிட்ட குற்றங்கள் புரிந்தவருக்கு ஒரு காலக்கெடுவுக்குள் தண்டனை கிடைப்பது உறுதி செய்யும் வகையில் இந்த மூன்று சட்டங்கள் அமைந்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குற்றவியல் சட்டங்களால் மக்கள் பாதுகாப்பாக அச்சம் இல்லாமல் வாழ வேண்டும் என்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
பெரிய குற்றங்களை ஒரு காலக்கெடுவிற்குள் முடிக்க புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.இல்லையென்றால் நீத்து போகும்..
புதிய சட்டம் குறித்து குற்றம் செய்பவர்களுக்கும் பொது மக்களுக்கும் சட்டத்தின் கடுமையை தமிழில் விளக்க வேண்டும்..பல ஆண்டுகள் கழித்து நமக்கு உணர்வு ஏற்பட்டு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளோம்..நியாயம் மக்களுக்கு கிடைக்க வேண்டும்..
புதிய தொழில்நுட்பத்தை வைத்து குற்றங்கள் அதிகரிப்பு.இதனை தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது..நீதி விரைந்து கிடைக்க 7 விரைவு நீதிமன்றங்கள் புதிதாக துவங்கப்பட்டுள்ளது.
காவல் துறையினரும் காவல் துறையினரும் நீதிமன்றங்களும் இணைந்து செயல்பட்டால் நீதி விரைந்து கிடைக்கும் என்றும்
முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்,சட்டத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை செயலர் சர்த் சவ்கான்,காவல் துறை தலைவர் ஸ்ரீநிவாஸ் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆன்லைன் டிரேடிங்கில் 3-லட்சத்திற்கு மேல் பணம் இழந்த விரக்தி*இழந்த பணத்தை பெற மேலும் நண்பரின் பத்திரத்தை வைத்து 5 லட்சம் கடன் கேட்டதில் மோசடி.
குளிர்பானத்தில் விஷம் மற்றும் எலி மருந்தை கலந்து குடும்பத்துடன் தற்கொலை முயற்சி
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான பள்ளி தென்னல் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகாந்த் (32) இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.உடல்நிலை சரியில்லாமல் இருந்த விஜயகாந்த் பணியில் இருந்து விலகி வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்துள்ளார்.
அப்போது அவர் ஆன்லைனில் சம்பாதிப்பது எப்படி என்பது குறித்து தேடி உள்ளார்.அப்படி தேடும் போது ஒரு தனியார் உடைய BYBIT App-ல் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் கூடுதல் பணம் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர் அதன் அடிப்படையில் சிறுக சிறுக கடன் வாங்கி தனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை செலுத்தி உள்ளார். ஒரு கட்டத்தில் ரூ. 3 லட்சத்திற்கு மேல் பணத்தை கட்டியதாக தெரிகிறது. இதில் லாபமாக 12 லட்சம் ரூபாய் உள்ளதாகவும் இதனை பெறுவதற்காக மேலும் 5 லட்சம் ரூபாய் பணத்தை கட்ட வேண்டும் என நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நண்பர்கள் கொடுத்த கடனை திருப்பி கேட்டுள்ளனர். இந்த கடனை அடைக்கவும், ஆன்லைன் டிரேடிங்கில் கட்டவும், நண்பர் ஒருவரின் வீட்டு பத்திரத்தை அதே ஊரை சேர்ந்த ரமா தேவியிடம் அடமானம் வைத்து 5 லட்சம் கடன் கேட்டார். முதலில் ஒரு லட்சம் அனுப்பியதாகவும். அதன் அடிப்படையில் பத்திரத்தை கொடுக்க வேண்டுமென கேட்டுள்ளனர். இவர் கையில் ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொடுக்கவில்லை அதேபோல் இவர் வங்கி கணக்கிலும் பணத்தை செலுத்தவில்லை. இது அறிந்த விஜயகாந்த் பண வரவில்லை என்றும் 5 லட்ச ரூபாய் தர வேண்டும் ரமாதேவியிடம் கேட்டுள்ளார்…இதில் பணமும் கிடைக்கவில்லை, பத்திரமும் கிடைக்கவில்லை…
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விஜயகாந்த் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷ பாட்டிலில் எலி மருந்தை சேர்த்து அவருடைய மனைவி வாணி மற்றும் ஒரு வயது குழந்தை தஷ்மிகா ஆகியோருக்கு குளிர்பானத்தில் கலந்து கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து மூன்று பேரும் இரு சக்கர வாகனத்தில் புதுவை நோக்கி வந்தனர். மேட்டுப்பாளையம் அருகே வந்த பொழுது விஜயகாந்த்க்கு மயக்கம் ஏற்பட்டு மோட்டார் சைக்கிள் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்த அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது மூன்று பேருமே விஷம், எலி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.மூன்று பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த வில்லியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் விஜயகாந்த் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார் அந்த கடிதத்தில் தனது சாவுக்கு காரணம் எம். என். குப்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் பெயரை குறிப்பிட்டுள்ளார். இதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் டிரேடிங்கில் 3 லட்சத்திற்கு மேல் பணத்தை இழந்த விரக்தியில் விஷம் மற்றும் எலி மருந்து அருந்தி குடும்பத்துடன் தற்கொலைக்கும் முயன்ற சம்பவம் புதுச்சேரி, தமிழக பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது…
நாடு முழுவதும் இன்று நடைமுறையானது மத்திய அரசின் மூன்று சட்டங்கள்
புதுச்சேரியில் உள்ள காவல் நிலையங்களில் வாழைமரம், பலூன்கள் மற்றும் வண்ண தோரணங்கள் கட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
3- புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது, இந்நிலையில் புதுச்சேரி காவல்துறை சார்பில் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது, இதில் வில்லியனூர் காவல் நிலைய நுழைவாயிலில் வாழைமரம், பலூன்கள் தோரணம் ஆகியவை கட்டி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஆய்வாளர் ஆறுமுகம் விளக்கம் அளித்தனர் இதேபோல் புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
புதுச்சேரி மாநிலம் பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று வருகிறது
உயர் ரக மாடுகளின் விந்தணு மற்றும் கருமுட்டையை கொண்டு செயற்கையாக கருவூட்டல் முறையை புதுச்சேரியில் முதல் முறையாக செலுத்தும் முகாமை கால்நடைத்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் துவக்கி வைத்தார்…
புதுச்சேரியில் மத்திய அரசு ராஷ்ட்ரிய கோகுல் திட்டத்தின் கீழ் கால்நடைத்துறை சார்பில் பாலினம் பிரிக்கப்பட்ட கருக்களை கொண்டு செயற்க்கை கருவூட்டல் முறையில், பெண்கன்றுகளை ஈனும் திட்டம் இன்று மேல் சாத்தமங்கலம் கிராமத்தில் நடந்தது.
நாள் ஒன்றுக்கு 25 லிட்டர் பால் கொடுக்கும் உயர் ரக மாடுகளின் விந்தணு மற்றும் கருமுட்டையை கொண்டு செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்யப்பட்டு ஆறு நாட்கள் ஆன கருமுட்டைகளைக் கொண்டு செயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கால்நடைத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு திட்டத்தினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கால்நடை துறை இயக்குனர் டாக்டர் கோலதா மங்கேஷ்கர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,…
இந்தியாவிலேயே புதுச்சேரி மாநிலத்தில் மட்டும்தான் உயர்ரக, கலப்பின, பாலினம் பிரிக்கப்பட்ட கருக்களை கொண்டு செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்யும் திட்டம் இலவசமாக கால்நடை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. புதுச்சேரியில் இந்த ஆண்டு ரூ.1 கோடி செலவில் 500 கால்நடைகளுக்கு இந்த சேர்க்கை கருவூட்டல் செய்யப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கால்நடை விவசாயிகள் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
புதுச்சேரி மாநிலம் பால் உற்பத்தியில் தன்னிறைவை பெற்றிடவும், கால்நடை விவசாயிகளின் வருமானம் பெருகிடவும், புதுச்சேரி அரசு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ், அதிக பெண் கன்றுகளை ஈனும் பாலினம் பிரிக்கப்பட்ட விந்தணுக்களை கொண்டு செயற்க்கை கருவூட்டல் முறை முறையின் மூலமாக அதிக பெண் கன்றுகளை ஈனும் திட்டம் கடந்த ஆண்டு முதல் சிறப்பாக புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.
இத்திட்டத்தின் அடுத்த பகுதியாக, உயர்ரக, கலப்பின, பாலினம் பிரிக்கப்பட்ட கருக்களை கொண்டு சேர்க்கை கருவூட்டல் முறையில், பெண்
கன்றுகளை ஈனும் திட்டம், இந்த ஆண்டு முதல் புதுச்சேரியில்
நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்றும் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தெரிவித்தார்.