in

இன்றைய முக்கிய செய்திகள் | புதுவையின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (03.07.2024)


Watch – YouTube Click

இன்றைய முக்கிய செய்திகள் | புதுவையின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (03.07.2024)

 

புதுச்சேரியில் ஊர்க்காவல் படை பணிக்கு தேர்வான இளைஞர்களுக்கு தலை வாழை இலை போட்டு பிரியாணி விருந்து

டாடா ஏ.சி ஓட்டுனர் ஊர்க்காவல் படை வீரர் மனைவியின் நகையை மாதந்தோறும் அடகு வைத்து குடும்ப செலவை பார்த்து தேர்ச்சி

காக்கி சட்டை போட வேண்டும் என்பது கணவரின் ஆசை அதை நிறைவேற்றியது எனக்கு பெருமை தேர்வான பெண்ணின் நெகழ்ச்சி பேட்டி

புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பம் தனியார் மையத்தில் புதுச்சேரி மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள 80-க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் பயிற்சி பெற்று வந்தனர்.

நடந்து முடிந்த ஊர்க்காவல் படை பணிக்கான தேர்வில் இந்த மையத்தில் இருந்து 35 பேர் தேர்வு செய்யப்பட்டு அரியாங்குப்பத்திற்கு பெருமை சேர்த்தனர்.

ஊர்க்காவல் படை பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை பாராட்டி கௌரவப்படுத்தும் வகையில்
தேர்வான ஆண்கள் பெண்களை தனியார் மையம் நிறுவனங்கள் பாராட்டினார்கள்.

இவர்களுடன் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து ஊர்க்காவல் படைக்க தேர்வானவர்களுக்கு தலைவாழை இலை போட்டு பிரியாணி விருந்து அளித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் ஊர் காவல் படைக்கு தேர்வான அனைவருக்கும் சால்வைகள் அணிவித்து இனிப்புகள் வழங்கியும் பாராட்டினர்.

இது குறித்து ஊர் காவல் படைக்கு தேர்வான இலவன் கூறும்போது..

tata ace ஓட்டுனராக இருந்த தன்னை ஏளனமாக பார்ப்பார்கள் ஆனால் எப்படியாவது ஒரு அரசு வேலை வாங்க வேண்டும் என்று மனைவியின் நகைகளை மாதம் ஒவ்வொன்றாக அடகு வைத்து தேவையான குடும்ப செலவையும் படிப்பு செலவையும் கவனித்து தற்போது ஊர் காவல் படை வீரராக தேர்வாகி உள்ளேன் என பெருமையுடன் தெரிவித்தார்.

இது குறித்து வினோதினி கூறும்போது…

தனது கணவர் போலீஸ் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது அவருக்கு அந்த வேலை கிடைக்காமல் போனது காக்கி சட்டை போட வேண்டும் என்று தனது கணவர் ஆசைப்பட்டாலும் அவருக்கு அந்த வேலை கிடைக்கவில்லை எனவே கணவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் எனக்கு ஊர்க்காவல் படையில் பணி கிடைத்தது பெருமையாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

 

 

இந்துக்களை வன்முறையாளர்கள் என தெரிவித்த ராகுல் காந்தியை கண்டித்து புதுச்சேரி பாஜக இளைஞர் அணி சார்பில் ராகுல் காந்தி படத்தை எரித்தும் செருப்பால் அடித்தும் போராட்டம்.

காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகை இட முயன்றதால் காவல்துறைக்கும் ஆர்ப்பாட்டக்காளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு.

நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் இந்துக்கள் அனைவரும் வன்முறையாளர்கள் என்று ராகுல் காந்தி பேசி உள்ளதை கண்டித்தும், இதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி பாஜக இளைஞர் அணியினர் 50 மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராகுல் காந்தியின் உருவப்படத்தை கிழித்தெறிந்தும், தீயிட்டு கொளுத்தியும், உருவப்படத்தின் மீது செருப்பால் அடித்தும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் திடீரென காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட ஓட துவங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் கேட்டுக்கொண்டதுக்கேற்ப பாஜகவினர் கலைந்து சென்றனர்.

 

 

புதுச்சேரி….பாரம்பரிய மிதிவண்டி ரிக் ஷாவில் கூரை போட்டு பயணிக்கும் ரஷ்ய குடும்பம்..

குழந்தைகளுடன் புதுச்சேரி நகர வீதிகளில் உலா.

உலக மக்கள் ஒன்றிணைந்து ஒரே குடும்பமாக வாழ வேண்டும் என்ற மகான் ஸ்ரீ அரவிந்தரின் கனவை ஆரோவில் சர்வதேச நகரம் மூலம் நினைவாக்கியவர் ஸ்ரீஅன்னை.தற்போது பல வெளிநாட்டவர் ஆரோவில்வாசிகளாக மாறி அவர்களுக்கு தெரிந்த வேலைகளை செய்து வசித்து வருகின்றனர்.அப்படி வசிக்கும் ரஷ்ய தம்பதியரான செர்க்கே மற்றும் தான்யா.இவர்கள் பயணிப்பது ஏசி காரோ விலை உயர்ந்த பைக்கோ கிடையாது.

நமது பாரம்பரியமிக்க ரிக்ஷா மட்டுமே. ஆரோவில் ஆட்டோமொபைல் பணிமனையில் வேலை செய்யும் செர்க்கே வடிவமைத்த கூரை போட்ட ரிக் ஷாவில் தான் குடும்பமே பயணிக்கிறது.அவரது மனைவி தான்யா ஒரு ஓவியர்.இவர்களுக்கு 3 குழந்தைகள்.ஆரோவில்லில் இருந்து புதுச்சேரிக்கு ரிக்ஷாவில் தான் வந்து செல்கின்றனர்.வெயிலோ மழையோ தாக்காத வகையில் மேல் கூரை,பக்க வாட்டில் தடுப்பு திரை என அமைத்துள்ள செர்க்கே எத்தனை கி.மீ. தூரமாக இருந்தாலும் தானே மிதித்து ஓட்டி செல்கிறார்.இந்த வாகனம் நகரப்பகுதியில் செல்லும் போது பலரது கவனத்தையும் ஈர்க்கிறது….


Watch – YouTube Click

What do you think?

இன்றைய வானிலை அறிக்கை | Today Weather Report 03.07.2024 | Today Weather News

இன்றைய முக்கிய செய்திகள் | தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (03.07.2024)