இன்றைய முக்கிய செய்திகள் | புதுவையின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (05.07.2024)
மத்திய அரசைக் கண்டித்து திமுக வழக்கறிஞர்கள் அணி ஆர்பாட்டம்.
எதிர்க்கட்சிகள் எங்களுக்கு தாங்கள் என்று கேட்பதில்லை, மக்களுக்கான திட்டங்களை கேட்கிறோம் முதல்வர் செய்கிறார். பாஜக எம்எல்ஏ குற்றச்சாட்டுக்கு திமுக எம்எல்ஏ சம்பத் பதில்.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், அதன் புரியாத சமஸ்கிருத தலைப்பை திணிப்பை எதிர்த்து திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தின் வாயில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத் தலைமையில் 50 மேற்பட்ட திமுக வழக்கறிஞர்கள் அணியினர் கலந்து கொண்டு புதிதாக கொண்டுவரப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் சம்பத்
என் ஆர் காங்கிரஸ் – பாஜக சண்டை புதுச்சேரி தமிழ்நாடு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உண்மையாக தான் இவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்களா என கேள்வி… வேடிக்கையாக உள்ளது இவர்கள் சண்டை, அதனுடைய எதிரொலி தான் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி.
பாஜக வெளியேறினால் திமுக ஆதரவு தருமா என கேள்விக்கு தலைமை தான் அதற்கு முடிவு தரும் என பதிலளித்தார்…எதிர்க்கட்சிகள் நாங்கள் நல்ல படித்திருக்கிறோம் எந்த திட்டத்திற்கு பணம் உள்ளது எப்படி வாங்க வேண்டும் என்பதை எங்களுக்கு தெரியும்,எதிர்க்கட்சிகள் எங்களுக்கு தாங்கள் என்று கேட்பதில்லை…மக்கள் பிரச்சனைக்காகவே முதலமைச்சர் இடம் கோரிக்கை வைத்து திட்டங்களை செயல்படுத்துகிறோம் என தெரிவித்தார்…
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டு குழந்தைகளுடன் தம்பதியினர் தர்ணா
தனது வீட்டுமனை பட்டாவை அபகரித்துக் கொண்டு உறவினர் தன்னை வீட்டைவிட்டு துரத்தி விட்டதாக கண்ணீர் மல்கப் புகார்
புதுச்சேரி வாதானூர் இருளர் குடியிருப்பு பகுதி சேர்ந்தவர் ஜெயபால் இவரது மனைவி மாற்றுத்திறனாளியான பழனியம்மாள் அவர்கள் இன்று இரண்டு குழந்தைகளோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களை அழைத்த மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் விவரங்களை கேட்டறிந்தார்.
அப்போது அவர்கள் தனக்கு இருந்த வீட்டு மனை பட்டாவில் மூன்று லட்ச ரூபாய் செலவு செய்து வீடு கட்டினேன். தற்போது தனது மைத்துனரான பழனிவேல்
வீட்டோடு எனது இடத்தை அபகரித்துக் கொண்டு தன்னை வீட்டை விட்டு துரத்தி விட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து திருவனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் புகார் எடுக்கவில்லை எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க வலியுறுத்தினார்.
இதன் அடுத்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பிரச்சனையை தீர்க்க உத்தரவிட்டார்.
வீட்டுமனையை அபகரித்துக் கொண்ட சம்பவத்தில் தம்பதியினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டு குழந்தைகளுடன் தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது..
எனக்கு என்று வழங்கப்பட்ட வீட்டுமனை மனபட்டாவை தனது மைத்துனரான பழனிவேல் அபகரித்துக் கொண்டு தன்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்.
இதனால் தங்க இடம் இல்லாமல் தெருவோரங்களிலும் மரத்தடிகளிலும் இரண்டு குழந்தைகளோடு கஷ்டப்பட்டு வருகிறேன் எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனக்கென்று ஒதுக்கப்பட்ட இலவச மனை பட்டாவை என்னிடம் வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
புதுச்சேரி…பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் புகாரை தொடர்ந்து மேலிட பொறுப்பாளர்கள் புதுச்சேரி வர உள்ளனர்…பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பேட்டி….
புதுச்சேரி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், நியமனம் எம்எல்ஏக்கள், ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆகியோர் டெல்லி சென்று பாஜக மேலிட தலைவர்களை சந்தித்தனர். அப்போது எம்எல்ஏக்கள் எம்எல்ஏக்களுக்கு வாரியத் தலைவர் வழங்கவில்லை, சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை பெறவில்லை,கூட்டணி தர்மத்தை முதலமைச்சர் மீறிவிட்டார் என்பது போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர் இதனை தொடர்ந்து புதுச்சேரி திரும்பி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது அவர்,என்.ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிறது. மூன்று ஆண்டுகளாக பாஜக எம்எல்ஏக்களிடம் முதலமைச்சர் எந்த கருத்தும் கேட்கவில்லை..
மூன்று ஆண்டுகளில் பட்ஜெட் போட்ட போது சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை கேட்கவில்லை என்றும் இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் தோல்வி அடைந்தார்.மீண்டும் மீண்டும் இதே நிலை நீட்டித்தால் அடுத்த தேர்தலில் பாதிப்பு பாஜகவுக்கு ஏற்படும்..இதே நிர்வாகம் நீடித்தால் பாஜகவுக்கு பாதிப்பு வரும்.. இந்த குளறுபடிகள் நீக்க வேண்டும் என பாஜக தலைமையிடம் வலியுறுத்தினோம் என்றார்.
சட்டமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் போது பல வாக்குறுதிகளை முதலமைச்சர் அளித்தார். வாரிய தலைவர் பதவிகளை தருவதாக கூறினார்.
ஆனால் தரவில்லை. எல்லாத் துறைகளும் முதலமைச்சரிடம் தான் இருக்கிறது. முதல்வர் சந்திக்க சென்றால் பார்க்க முடியவில்லை என கல்யாணசுந்தரம் குற்றம்சாட்டினார்.
அரசின் செயல்பாடுகளில் பல குளறுபடிகள் உள்ளது.இதனால் கூட்டணி தர்மத்தோடு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசித்து விட்டு அடுத்து இரண்டு ஆண்டுகள் ஆட்சியை நடத்த வேண்டும்.
மத்திய அரசு புதுச்சேரிக்கு நிறைய நிதி வழங்க தயாராக இருக்கிறது. ஆனால் முதலமைச்சரும் அமைச்சர்களும் டெல்லி செல்வதில்லை.மாநில வளர்ச்சிக்கு ஒத்துழைக்கவில்லை..கட்டுப்படவில்லை என்றால் கூட்டணியில் இருந்து வெளியே வந்து விடுவோம்.கூட்டணியில் இருக்க வேண்டும் என முதலமைச்சர் விரும்பினால் ஒத்துழைப்பு தர வேண்டும் …
புதுச்சேரி வளர்ச்சிக்கு தான் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் வந்துள்ளோம்.வளர்ச்சியே இல்லாமல் கூட்டணியில் இருந்து என்ன பயன்…? எனவும் கல்யாணசுந்தரம் கேட்டார்.
நிதி சுமை எனக் கூறி வாரிய தலைவர் பதவி தராமல் இருப்பது தவறு.தற்போது தலைவராக உள்ள அதிகாரிகள் செய்யும் வேலையை தான் எம்எல்ஏக்கள்..இதில் நிதி சுமை வராது என்றும் தங்களது நிலைப்பாடு தொடர்ந்து விரைவில் மேலிட பொறுப்பாளர்கள் புதுச்சேரி வரவுள்ளனர்.இவர்கள் புதுச்சேரி பாஜக தலைவர், அமைச்சர்கள், பாஜக எம்எல்ஏக்கள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்திவிட்டு முதலமைச்சரையும் சந்திக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கல்யாணசுந்தரம்
தெரிவித்தார்..
புதுச்சேரி…பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் புகாரை தொடர்ந்து மேலிட பொறுப்பாளர்கள் புதுச்சேரி வர உள்ளனர்…பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பேட்டி….
புதுச்சேரி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், நியமனம் எம்எல்ஏக்கள், ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆகியோர் டெல்லி சென்று பாஜக மேலிட தலைவர்களை சந்தித்தனர். அப்போது எம்எல்ஏக்கள் எம்எல்ஏக்களுக்கு வாரியத் தலைவர் வழங்கவில்லை, சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை பெறவில்லை,கூட்டணி தர்மத்தை முதலமைச்சர் மீறிவிட்டார் என்பது போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர் இதனை தொடர்ந்து புதுச்சேரி திரும்பி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது அவர்,என்.ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிறது. மூன்று ஆண்டுகளாக பாஜக எம்எல்ஏக்களிடம் முதலமைச்சர் எந்த கருத்தும் கேட்கவில்லை..
மூன்று ஆண்டுகளில் பட்ஜெட் போட்ட போது சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை கேட்கவில்லை என்றும் இந்த நிலையில்
மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் தோல்வி அடைந்தார்.
மீண்டும் மீண்டும் இதே நிலை நீட்டித்தால் அடுத்த தேர்தலில் பாதிப்பு பாஜகவுக்கு ஏற்படும்..இதே நிர்வாகம் நீடித்தால் பாஜகவுக்கு பாதிப்பு வரும்.. இந்த குளறுபடிகள் நீக்க வேண்டும் என பாஜக தலைமையிடம் வலியுறுத்தினோம் என்றார்.