in

தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை….


Watch – YouTube Click

தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை….

தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவையில் லேசான மழை பதிவாகியுள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூரில் 20cm, நீலகிரியில் 19cm, திருநெல்வேலியில் 8cm மழை பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக தொண்டியில் 38.3 degree செல்சியசும் குறைந்தபட்சமாக நாமக்கலில் 18.5 degree செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.
வடதமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 33-37 degree செல்சியஸ், தென்தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 34-36 degree செல்சியஸ், வடதமிழக கடலோர பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35-37 degree செல்சியஸ், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் 30-38 degree செல்சியஸ் மற்றும் மலைப்பகுதிகளில் 16-23 degree செல்சியஸ் பதிவாகியுள்ளது.

சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 35.8 degree செல்சியசும் நுங்கம்பாக்கத்தில் 35.6 degree செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
இன்று, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைபகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 5 தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில், 2-3 degree செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 degree செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 degree செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகளின், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிகடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 km வேகத்திலும் இடையிடையே 55km வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகளில் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 km வேகத்திலும் இடையிடையே 55km வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகளில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 km வேகத்திலும் இடையிடையே 65km வேகத்திலும் வீசக்கூடும்.

லட்சத்தீவு பகுதிகள், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 km வேகத்திலும் இடையிடையே 55km வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Watch – YouTube Click

What do you think?

துபாய் கார் ரேஸ்…சில் கலக்கும் தல

செல்பி எடுக்க வந்த ரசிகரை தள்ளிவிட்ட தனுஷ் பாதுகாவலர்