in , ,

தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை….


Watch – YouTube Click

தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை….

கடந்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது, புதுவையில் மிக லேசான மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரியில் 10cm, கோயம்புத்தூரில் 6cm மழை பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை தூத்துக்குடியில் 37 degree செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 19 degree செல்சியஸ் பதிவாகியுள்ளது.
நேற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரிசா மற்றும் வட ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 8.30 மணியளவில் ஒரிசா கடற்கரையை ஒட்டிய சில்கா ஏரி அருகில் நிலவுகிறது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஒரிசா மற்றும் சத்திஸ்கர் அருகில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த பகுதியாக வலுவிழக்ககூடும்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,நாளை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 degree செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 degree செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகளின், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரபகுதிகள் மற்றும் குமரிகடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 km வேகத்திலும் இடையிடையே 55km வேகத்திலும் வீசக்கூடும்.

வடக்கு, மத்திய வங்கக்கடல், வடக்கு ஆந்திர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 km வேகத்திலும் இடையிடையே 65km வேகத்திலும் வீசக்கூடும்.

தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 km வேகத்திலும் இடையிடையே 55km வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 km வேகத்திலும் இடையிடையே 65km வேகத்திலும் வீசக்கூடும்.

கேரள-கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 km வேகத்திலும் இடையிடையே 55km வேகத்திலும் வீசக்கூடும்.


Watch – YouTube Click

What do you think?

மாற்றுத்திறனாளி இளைஞருக்கு கடை வைத்துக் கொடுத்து உதவிய சமூக சேவகர் பாராட்டு

செஞ்சி ஸ்ரீவிசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் கோயில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை வளர்பிறை பிரதோஷ விழா ..