ராமேஸ்வரம் அருகே வில்லுண்டி தீர்த்த கிணறு தடுப்புகள் சேதம்
ராமேஸ்வரம் அருகே வில்லுண்டி தீர்த்த கிணறு தடுப்புகள் சேதம் சீரமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை
ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தின் வில்லுண்டி தீர்த்த கிணற்றின் தடுப்புகள் இடிந்து சேதம் அடைந்துள்ளதால் பக்தர்கள் சுற்றுலாப் பயணிகள் கடலில் தவறி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே சேதமடைந்த தடுப்புச் சுவற்றை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ரெசீதி பெற்ற ராமநாதசுவாமி கோயில் உள்ளது. இங்கே 22 தீர்த்த கிணறுகள் உள்ளன கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் 22 தீர்த்த கிணறுகளில் நீராடி சாமி திரிசனம் செய்வர். இது தவிர கோயிலுக்கு வெளியே பல்வேறு இடங்களில் தீர்த்த கிணறுகள் உள்ளன.
இவைகளை பக்தர்கள் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மட்டும் வருவர் சிலர் நீராடுவர் இந்நிலையில் ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் உள்ள வில்லுண்டி தீர்த்தக்கிணறு ஸ்ரீ ராமல் உருவாக்கப்பட்டது என்பது ஐதீகம் நன்னீர் ஊற்றெடுக்கும் இந்த தீர்த்த கிணறுக்கே ஏராளமான பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றன.
தீர்த்த கிணறு கான்கிரீட் பாலம் வழியாக பக்தர்கள் சென்று வருகின்றன ஆனால் தீர்த்தக் கிணரை சுற்றியுள்ள தடுப்புகள் சேரமடைந்துள்ளன தற்காலிகமாக மரக்கட்டைகளால் தடுப்பு அமைத்துள்ளன.
இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் புகைப்படம் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் கடலில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே தீர்த்துக் கிணறை சுற்றியுள்ள தடுப்புகளை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.