இறந்தும் வாழ வைத்த டேனியல் பாலாஜி
நன்றாக இருந்த டானியல் பாலாஜி திடீரென்று மாரடைப்பால் இறந்து விட்டார் என்ற செய்தியை திரை உலகினரால் நம்ப முடியவில்லை. 48 வயதே ஆன டேனியல் பாலாஜிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர்கள் காப்பாற்ற முடியாமல் மறைந்தார்.
அவரின் மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் இறந்தும் மற்றவரை வாழ வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் செய்த காரியம் நிச்சயம் பாராட்ட பட வேண்டியது.
அதாவது தன் கண்களை அவர் ஏழ்மை நிலையில் இருக்கும் ஒருவருக்கு தானம் செய்திருப்பது அனைவரையும் நெகிழவைத்திருகிறது.
அவர் இறந்த பிறகு அவரின் கண்களை அறுவை சிகிச்சை செய்து குடும்பத்தாளரிடம் ஒப்படைக்கப்பட்டது அவரின் கண்களை வெள்ளை துணையால் கட்டி கருப்பு கண்ணாடி அணிவித்து அஞ்சலிக்கு வைக்கப்பட்டார்.
48 வயதான போதிலும் Daneil பாலாஜி இன்னும் திருமணம் செய்து கொள்ள வில்லை அதற்கு காரணம் அவர் ஆன்மீகத்தின் மீது உள்ள மற்றும் தன்னால் இயன்ற உதவியை மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தாராம்.