திருநள்ளாறில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் சாமி தரிசனம்
திருநள்ளாறில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று சனிக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் அதிகாலை முதல் பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து ஸ்ரீ சனீஸ்வர பகவானை சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் சனீஸ்வர பகவானுக்கு இன்று சனிக்கிழமை என்பதால் அதிகாலை அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பலித்தார். முன்னதாக ஏராளமான பக்தர்கள் நளன்தீர்த்த குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்ததால் திருநள்ளாறு போலீசார் பலத்த பாதுகாப்பு பணிய ஈடுபட்டனர்.