விஷாலூக்கு காதல் பரிசு கொடுத்த தர்ஷிகா
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8, 10வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் மீண்டும் இரட்டை எலிமினேஷனை கொடுத்து அதிர வைத்தார் பிக்க் பாஸ்.
அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில், தர்ஷிகா மற்றும் சத்யா வெளியேற்றப்பட்டனர்.
வீட்டை விட்டு வெளியேறும் முன், தோட்டப் பகுதியில் உள்ள BB கோப்பையை அடித்து நொறுக்கி உணர்ச்சிவசப்பட்டு விடைபெற்றார்.
இந்த சீசனின் முதல் கேப்டனான இவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதற்கு முன், விஜய் சேதுபதி அருமையாக விளையாடிய உங்களுக்கு சிறந்த எதிர்கால உண்டு என்றார்.
இவர் Eliminate ஆனதிற்கு வருத்தம் தெரிவித்த நெட்டிசன் ஒருவர் “இந்த சீசனின் மிகப்பெரிய இழப்பு, கேம் சேஞ்சர், டாஸ்க் பீஸ்ட் & ஸ்ட்ரேடஜி ராணி ஆனால் ஒரு பயனற்ற மனிதனால் அனைத்தும் தோல்வியடைந்தன என்று பதிவிட்டுள்ளார்.
லவ் Content கொடுத்ததும் தர்ஷிகா…வை மக்கள் நிராகரித்து விட்டனர். பிக்க் பாஸ் வீட்டை விட்டு வெளியேருவதிற்கு முன்பு விஷாலை கட்டி அணைத்து தன் அம்மாவின் மோதிரத்தை காதல் பரிசாக கொடுத்து, டைட்டில் ..லுடன் வெளியே வர வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார்.