in

டி இமான் கச்சேரி தீயில் தொடங்கி சூறாவளிக்காற்றுடன் மழை தகர சீட்டுகள் பறந்ததால் ரசிகர்கள் ஓட்டம்


Watch – YouTube Click

திருச்சியில் டி.இமான் கச்சேரி தீயில் தொடங்கி சூறாவளிக்காற்றுடன் மழை . தகர சீட்டுகள் பறந்ததால் ரசிகர்கள் ஓட்டம் – நிகழ்ச்சி ரத்து

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அம்மாபேட்டை அருகே தனியார் பொறியியல் கல்லூரி இசையமைப்பாளர் டி இமான் இன்னிசை நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுவதாக இருந்தது. 8500 க்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டிருந்தது. மாலை 6 மணி அளவில் பலத்த காற்று வீசத் துவங்கியது.பின்பு பலத்த காற்று வீசி கனமழையாக பெய்தது.

மேடை திறந்து வெளியாக அமைக்கப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் அங்கு அமைக்கப்பட்டிருந்த எல்ஈடி விளக்கு கம்பங்கள், தகர சீட்டுகள் , சாய்ந்து விழும் நிலைக்கு சென்றது. ரசிகர்கள் மழை மற்றும் காற்றிலிருந்து தங்களை காத்துக் கொள்ள அங்கு இங்குமாக ஓடினர்.பின்பு கல்லூரி வளாகத்திற்கு உள்ளே உள்ள இடத்தில் நூற்றுக்கணக்கானோர் மழையில் முழுவதும் நனைந்து உள்ளே ஓடி வந்து நின்றனர்.

நிகழ்ச்சியை பார்த்து இன்னிசை மழையில் நனையலாம் என்று எதிர்பார்த்த அவர்களுக்கு சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் அனைத்தும் தவிடு பொடியாக்கியது. முன்னதாக நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் ஒலி ஒளி அமைப்புகளுக்குரிய ஜெனரேட்டர் தீ பற்றி எரிந்தது.

அதனை அங்கு உள்ளவர்களே அணைத்தனர்.முதலில் தீ பின்பு மழை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை பெறும் அப்செட்டுக்கு ஆளாக்கியது. நிகழ்ச்சி ரத்தானதால் அங்கு வந்த ரசிகர்கள் மழையில் நனைந்து வீடு திரும்பும் முன் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.


Watch – YouTube Click

What do you think?

நிலக்கோட்டை அருகே கலையரங்க மராமத்து நிதியில் முறைகேடு மூன்றே மாதத்தில் பெயர்ந்து விழுந்த டைல்ஸ்கள்

மீண்டும் மோடி வருவார் என்று எனக்கு முன்பே தெரியும் திருச்சியில் தினகரன் பேட்டி