மகாராஜா படத்தின் வில்லன் அனுராக் காஷ்யப் குடும்பத்திற்கு கொலை மிரட்டல்
ஜோதிராவ் புலேவின் வாழ்க்கை வரலாறு ‘புலே’ என்ற தலைப்பில் இந்தியில் படமாக உருவாகியுள்ளது….
படத்தின் Trailer…ரில் மகாராஷ்ட்ராவிலுள்ள பிராமணர் சமூகத்தின் ஒரு பகுதியினர் தவறாக சித்தரித்திருபதாக கண்டனம் வலுத்தது.
அதனால் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இது தொடர்பாக மகாராஜா படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகரும் இயக்குனருமான அனுராக் காஷ்யப், சாதி இல்லையென்றால், நீங்கள் எப்படி பிராமணர்களானீர்கள்?
மோடி சொன்னபடி, ஒன்று பிராமிணிசம் ஒழிக்கப்பட்டிருக்க வேண்டும்; அல்லது நாங்கள் முட்டாளாக்கப்பட்டிருக்க வேண்டும். மக்கள் முட்டாள் அல்ல என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
பிராமணர்களை பற்றி தவறான கருத்துக்களை பரப்பியதால் அவருக்கு கண்டனங்கள் வலுத்தது, அவரது குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
தன் கருத்துக்கு மன்னிப்பு கேட்டவர் அதற்கான விளக்கதையும் அளித்துள்ளார். நான் சொன்ன கருத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டி கொள்ளுங்கள் ஆனால் என்னுடைய குடும்பத்தை பற்றி எதுவும் சொல்லாதீர்கள் உங்களுக்கு என்னுடைய மன்னிப்பு தான் வேண்டும் என்றால் இப்பொழுதே கேட்கிறேன் நீங்கள் எப்படிப்பட்ட பிராமினாக இருக்கிறீர்கள் என்பதை நீங்களே முடிவு பண்ணிக் கொள்ளுங்கள் என்று கூறி இருந்தார்.
மேலும் அவர் தனது குடும்பத்திற்கு மிரட்டல்கள் வரக்கூடாது என்பதற்காக மன்னிப்பு கேட்டார் மனமார மன்னிப்பு கேட்க வில்லை என்று மீண்டும் எதிர்ப்புகள் கிளம்ப சோசியல் மீடியா பக்கத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் அனுராக்.
அந்த பதிவில் என்னிடம் ஒருவர் கேள்வி கேட்டபோது நான் எனது கட்டுப்பாட்டை இழந்து விட்டேன் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் எனது வாழ்க்கையில் நெருங்கிய நண்பர்கள் அதனால் உரிமையுடன் கருத்து சொன்னேன் ஆனால் நான் யாரையும் உள்நோக்கத்துடன் குறி வைத்து பேசவில்லை இனி எதிர்காலத்தில் என்னுடைய கோபத்தை நான் கட்டுப்படுத்திக் கொள்கிறேன்.
மேலும் யாருடனாவது விவாதிக்க வேண்டும் என்றால் சரியான முறையை நான் கையாளுவேன் என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.