in

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜய கரிசல் குளத்தில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட மணிகள், சங்கு வளையல்கள், கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜய கரிசல் குளத்தில் 3-ம் கட்ட அகழ்வாய்வில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட மணிகள், சங்கு வளையல்கள், கண்டெடுக்கப் பட்டுள்ளது. இதுவரை 2600க்கும் மேற்பட்ட பழங்கால பொருள்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளதாக அகழ்வாய்வு இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழ்வாய்வில்  16 குழிகளில் தோண்டப்பட்டு உடைந்த நிலையில் ஆன சுடுமண் உருவ பொம்மை, கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், வட்டச் சில்லு, தங்கமணிகள் என‌ இதுவரை 2600க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிதாக தோண்டப்பட்ட குழியில் சுடுமண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட மணிகள், சங்கு வளையல்கள், கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்துஅகவாழ்வு இயக்குனர் பாஸ்கர், 3-ம் கட்ட அகழ்வாய்வில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட மணிகள் மற்றும் சங்கு வலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது மூலமாக முன்னோர்கள் அணிகலன்களுக்கும் அழகிருக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.

தொழில்கள் நடந்ததற்கு சான்றாக பல்வேறு அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

What do you think?

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே மூவரை வென்றான் பானை ஓடுகள் கிடந்த இடத்தில் தொல்லியல் துறை ஆய்வு…

காரியாபட்டி அருகே முடியனூர் கண்மாயில் 10 ஆயிரம் மீன் குஞ்சுகள் செத்து மிதப்பு