நவராத்திரி விழாவை முன்னிட்டு பூவராக பெருமாள் அலங்காரம்
பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன். கோயிலில் 7வது நாள் நவராத்திரி விழாவை முன்னிட்டு பூவராக பெருமாள் அலங்காரம்
பாபநாசம் அக். 10 பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் 7வது நவராத்திரி விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
அது சமயம் கோவிலில் கொலு பொம்மைகள் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது இதனை திரளான பக்தர்கள் கண்டு களித்தனர் நவராத்திரி விழாவில் நேற்று தங்க முத்து மாரியம்மன் கோவிலில் பூவராக பெருமாள் அலங்காரத்தில் பக்தருக்கு காட்சி அளித்தார். கோயில் செயல் அலுவலர் விக்னேஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.
பாபநாசம் மேல வீதியில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன் வயது 83 ஓய்வு பெற்ற பாபநாசம் நிலவள வங்கி செயலாளர் இவரது மனைவி சரோஜினி ஓய்வு பெற்ற சக்கராப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இவர்களது இல்லத்தில் கடந்த 55 வருடமாக கொலு பொம்மை கண்காட்சி நடைபெற்று வருகிறது.
கொலு கண்காட்சியில் மத நல்லிணக்கம் மனிதநேயம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு போன்ற வலியுறுத்த வகையில் மத கடவுள்களும் வைக்கப்பட்டு இருந்தது கொலு கண்காட்சியினை பெற்றோர்களும் பள்ளி குழந்தைகளும் ஏராளமான பார்வையாளர்களும் கண்டு ரசித்தனர்.