உலக அழகி பட்டியல் இடம்பிடித்திருக்கும் தீபிகா படுகோன்
உலகத்தில் மிகவும் அழகான 10 பெண்களின் பட்டியல் தற்பொழுது வெளியாகி உள்ளது. உலக அழகிகளை தேர்வு செய்வதற்கு மிஸ் இந்தியா மெஸ் யூனிவர் என்ற போட்டிகள் நடத்தப்படும்.
தற்போது உலக அழகைக்காக தேர்வு செய்யப்பட்ட பட்டியலில் தீபிகா படுகோன் பத்தாவது இடத்தை பெற்றுள்ளார்.
படுகோன் தனது திரைப்பட வாழ்க்கையை ஐஸ்வர்யா (2006) என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். இவரது முதல் பாலிவுட் படம் ஓம் சாந்தி ஓம்.
அண்மையில் இவர் நடித்த பதான் (2023), கல்கி 2898 AD (2024) மற்றும் ஜவான் உட்பட படங்கள் அதிக வசூல் செய்தது.
சிறந்த நடிகைக்கான இரண்டு பிலிம்பேர் விருதுகள் சிறந்த நட்சத்திரத்திற்கான ஸ்டார்டஸ்ட் விருது மற்றும் சிறந்த நடிகர்களுக்கான ஜீ சினி விருது உட்பட பல விருதுகளை படுகோன் வென்றுள்ளார்.
இந்தியாவில் மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தி லைவ் லவ் லாஃப் அறக்கட்டளையின் நிறுவனர் படுகோன். அறக்கட்டளையுடன் அவர் செய்த பணிக்காக 2018 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார மன்றத்தின் கிரிஸ்டல் விருதைப் பெற்றார்.
படுகோன் உலகளாவிய பேஷன் ஐகான், லூயிஸ் உய்ட்டன்(Louis Vuitton) மற்றும் கார்டி (Cartie) போன்ற பிராண்டுகளுக்கான பிராண்ட் தூதராக உள்ளார்.
படுகோன் நடிகை மட்டுமல்ல இவர் ஒரு மாடல், மற்றும் சிறந்த பேட்மிண்டன் வீரர். இயக்குனர் ஃபரா கானால் மாடலாக கவனிக்கப்பட்ட பிறகு, அவர் தனது படத்திற்காக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த திரைப்படம் 2007 ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த பாலிவுட் திரைப்படம் ஆனது. ஓம் சாந்தி ஓம் படத்தில் படுகோன் இந்தி திரைப்பட நடிகையாக நடித்தார்.
படுகோனே தனது சக நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார், அண்மையில் இவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
இந்நிலையில் உலக அழகிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த நடிகை ஜோடி கோமர். இரண்டாம் இடத்தை ஸ்பைடர் மேன் படத்தில் நடித்த ஜெண்டையா ..வும் மூன்றாம் இடத்தில் மாடலான பெலா ஹடிட் ….டும், உலக அழகிகள் படியலில் 38 வயதான ஒரே ஒரு பெண் இடம் பிடித்திருக்கிறார், அவர் வேறு யாரும் இல்லை தீபிகா படுகோன்…தான் 10..தாவது இடத்தை பிடித்திருக்கிறார்.