நிச்சயம் கூட்டத்திர்கான படம் அல்ல… வணங்கான் Movie Review
Bala போன்ற இயக்குனரின் கதைகள் ரசிகர்களின் இதயத்தில் வாளாக ஊடுருவி சிந்தனையை தூண்டிவிடும், இதுவரை அவர் தயாரித்த பத்து திரைப்படங்களில், கருப்பொருளாக ஒதுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சுற்றியே பெரும்பாலும் சொல்லபடிருகிறது.
அவரது படைப்புகளில் Heroism புறக்கணிக்க பட்டு பெரும்பாலும் வன்முறைத்தாண்டவம் ஆடும், கல்லுகுள்ளும் ஈரம் இருபதுபோல வன்முறைகுள்ளும் குடும்ப உறவுகளின் பாசத்தை அழகாக நுழைத்துவிடுவார்.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின், உள்ளிட்டோர் நடிப்பில் நேற்று வெளியான வணங்கான் படத்தின் Review..வை பார்போம்.
சுனாமியால் பெற்றோர்களை இழந்த இரண்டு குழந்தைகளாக அருண் விஜய் மற்றும் தேவி நடிக்கிறார். அருண் விஜய் தேவியை சொந்த தங்கையாக பாசத்துடன் ஆரவனைகிறார்.
கோட்டி …யாக வரும் அருண் விஜய்’, பிறவிலையே காது கேளாத வாய் பேச முடியாதவர். பேச முடியாவிட்டாலும் தவறு செய்தவர்களை கண்மூடி தினமாக அடித்து ஜெயிலுக்கு செல்வார் அவரை வெளியில் எடுப்பதே, அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் பாதிரியாரின் வேலை.
மேலும் சிறு வயது முதல் அருண் ..னை காதலித்து வரும் டீனா….வாக ரோஷினி பிரகாஷ். Short டெம்பர்…ரான கோட்டி …யை மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் சேர்த்து விடுகிறார் டீனா.
காப்பகத்தில் கண் பார்வையற்ற மூன்று பெண்கள் குளிப்பதை ஒரு சிலர் பார்த்து விட இதனை அவர்கள் கோட்டி..யிடம் கூற கோபத்தில் அவர்களை கொலை செய்து காவல் நிலையத்தில் தானே சரண்டர் ஆகிறார் அருண்.
ஆனால் எதற்காக கொலை செய்தார் என்ற காரணத்தை போலீஸ் துருவுகிறது, மூர்க்கத்தனமாக அடித்தும்’ அவரிடம் உண்மையை வரவழைக்க முடியவில்லை. போலீஸ் அதிகாரியாக சமுத்திரகனி மிடுகுடன் வருகிறார்.
இறுதியில் உண்மையை அருண் விஜய் கூறினாரா? என்பதே மீதி கதை. வலுவான கதைகரு இல்லை என்றாலும் பாலா தன் பாணியில் கதையை அழகாக நகர்த்தி இருக்கிறார். மேலும் வழக்கமாக தனது பாணியிலும் மெசேஜ் கொடுத்திருக்கிறார்.
மேலோட்டமாகப் பார்த்தால், இயக்குனர் பாலாவின் வணங்கான் திரைப்படம், பெண்களுக்கு, எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி தேடும் படமாகத் தோன்றலாம்.. அனாதை இல்லத்தில் பார்வையற்ற பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் போது, நீதி வழங்குவது கோட்டிதான்.
சட்டமோ அல்லது காவல்துறையோ அவருக்கு ஒரு பொருட்டல்ல சட்டத்தை யார்வேடும்னாலும் கையில் எடுத்து கொள்ளலாம் என்பது நெருடலாக இருக்கிறது. சைக்கிள் கேப்..கில் அரசியலையும் நையபுடைத்திருகிறார் பாலா.
பேச முடியாவிட்டாலும் தன் முக பாவனைாலும் உடல் அசைவுகலாலும் பின்னி எடுத்திருக்கிறார் அருண், முற்றிலும் மாறுபட்ட அருணை இந்த படத்தில் காணலாம்.
நடிக்க தெரியாதவர்கலையும் நடிக்கவைக்கும் தெரிந்த வித்தகன் பாலா. இன்றைய தேதிக்கு இவன் தான் சூப்பர் ஸ்டார் என்ற டயலாக் வணங்கான் படத்திற்கு பிறகு அருண் விஜய் நிஜமாகவே சூப்பர் ஸ்டார் ஆகிடுவார்…என்று சூசகமாக பாலா கூறியிருபது.
100 Percent ஏற்றுகொள்ளலாம். நீதிபதியாக வந்து தனது கதாபாத்திரத்திற்கு ஸ்கோர் செய்து இருக்கிறார் மிஷ்கின். அருண் விஜயின் நடிப்பிற்கு நிச்சயம் விருது கொடுக்க வேண்டும் இவருக்கு போட்டியாக தங்கை ரிதா நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார் இருவரும் போட்டி போட்டு நடித்திருப்பதில் யாருடைய நடிப்பை பாராட்டுவது என்று தெரியவில்லை அந்த அளவிற்கு இருவரும் உழைத்திருக்கிறார்கள், விருதுக்கு தகுதியானவர்கள், வணங்கம் படம் நிச்சயம் வணங்க வேண்டிய படம். நேற்று இந்தியாவில் மட்டும் 2 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.