in

தமிழக முதல்வருக்கு டெல்டா விவசாயிகள் நன்றி


Watch – YouTube Click

தமிழக முதல்வருக்கு டெல்டா விவசாயிகள் நன்றி

 

நீர்நிலைகளில் வண்டல் மண், களிமண் வெட்டி எடுக்க அனுமதி;தமிழக முதல்வருக்கு டெல்டா விவசாயிகள் நன்றி; உவர் நிலம், நன்நிலமாக மாறும் என்பதால், விவசாயிகள் மட்டற்ற மகிழ்ச்சி

பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்நிலைகளில் மண் மற்றும் வண்டல் மண், களிமண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக முதல்வரின் இந்த உத்தரவினால் மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ள டெல்டா விவசாயிகள், கட்டணமில்லாமல் விவசாய பயன்பாட்டிற்கு ஆன்லைன் மூலம் மண் எடுத்துக் கொள்ள அனுமதி அளித்த தமிழக முதல்வருக்கு கடைமடை விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் தேவைக்கு மண் எடுப்பதில் உள்ள சிக்கலை அரசு எளிதாக்கி உள்ளது வரவேற்கத்தக்க விஷயமாக பார்க்கும் விவசாயிகள், நீர் நிலைகளில் உள்ள மண்ணை எடுத்து, வேளாண் நிலங்களை சமப்படுத்துவதினால், உவர் நிலங்கள், நன்நிலமாக மாறும் என்ற நம்பிக்கை தங்களுக்கு எழுந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் களிமண் வெட்டி எடுக்க அனுமதி கிடைத்துள்ளதால் மண்பாண்ட தொழிலாளர்கள் இதன் மூலம் தங்களது வாழ்வை வளப்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரியில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்

ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்படுவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு