in

தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ள பொது கோவில் மற்றும் சுடுகாட்டு பாதையை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை

தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ள பொது கோவில் மற்றும் சுடுகாட்டு பாதையை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை

 

திருத்துறைப்பூண்டி அருகே தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ள பொது கோவில் மற்றும் சுடுகாட்டு பாதையை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வங்கநகர் கோட்டகம் கிராமத்தில் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த தனிநபர் அருள் சூசை என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 150 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார்.

இதனை சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள் அமைத்தும் வெளி ஆட்கள் யாரும் நுழையாதா அளவிற்கு இரும்பு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பல ஆண்டுகளாக வழிபட்டு வந்த கோவில் ஒன்றும் பொது மக்களின் சுடுகாடும் இதன் உள்ளே அமைந்துள்ளது.

இதற்கு செல்வதற்கு தனிநபரிடம் அனுமதி பெற்ற பின்னரே செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் பட்டா இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அந்த நிலத்தின் உள்ளே அரசின் நிலம் மீட்கப்பட்டு அதில் மனை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்த நிலையில் தற்போது அதனையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

மேலும் இந்த பாதை வழியாகத்தான் விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் செல்ல வேண்டும் இதனையும் முள் வேலி மற்றும் இரும்பு கேட் வைத்து அடைந்திருந்தால் மிகுந்த சிரமத்திற்கு அளாகி வருவதாகவும் பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே உடனடியாக அரசு தலையிட்டு தனி நபரிடமிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் மீண்டும் பயன்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாலயத் திருக்குளத்தில் ஆடி அமாவாசை திரளானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்

வைகை கல்பாலம் அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்