in

மின் கட்டண உயர்வு ரத்து செய்ய கோரி..இந்தியா கூட்டணி கட்சிகள் ஊர்வலம்

மின் கட்டண உயர்வு ரத்து செய்ய கோரி..இந்தியா கூட்டணி கட்சிகள் ஊர்வலம் – ஆர்ப்பாட்டம்.தடுப்புகளை தள்ளிச்சென்றதால் தள்ளுமுள்ளு பதட்டம்.

புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற்று மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.வழக்கமாக ஏப்ரல் 1ந் தேதி முதல் புதிய கட்டண உயர்வு ஆண்டுதோறும் அமலுக்கு வரும். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கலந்தாய்வு கூட்டம் புதுச்சேரியில் நடந்தது. இந்த கூட்டத்தில் மின் கட்டணத்தை உயர்த்த அரசியல், சமூக, பொதுநல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் கட்டண உயர்வுக்கு ஒழுங்குமுறை மின்சார ஆணையம் அனுமதியளித்தது. மின் கட்டண உயர்வை அரசு நடைமுறைக்கு கொண்டுவர அறிவிப்பு வெளியிட்டது. அதேநேரத்தில் பாராளுமன்ற தேர்தல் குறுக்கிட்டதால், மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய புதுச்சேரி ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது. இதனிடையே தேர்தல் நடந்து முடிந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜூன் 16ந் தேதி முன்தேதியிட்டு அன்றுமுதல் புதுவையில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வரும் என புதுவை அரசின் மின்துறை அறிவித்தது. இதற்கு புதுவையில் உள்ள அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மின்கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் மின்கட்டணத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.மின் கட்டண உயர்வை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் தனித்தனி போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.

இதன்படி இன்று இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட்டு, மார்க்சிஸ்ட்டு, விடுதலை சிறுத்தைகள், இந்தியயூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட்டு எம்எல் ஆகிய கட்சிகள் சார்பில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது. காலை 9 மணி முதல் போராட்டத்துக்காக அண்ணா சிலை அருகே இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்று கூடினர்.அங்கிருந்து காலை 10.15 மணியவில் ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்துக்கு திமுக அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவர் சிவா, மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதல அமைச்சர் நாராயணசாமி, இந்தியகம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஊர்வலம் அண்ணாசாலை, நேருவீதி வழியாக தலைமை செயலகத்தை நோக்கி சென்றது. அப்போது போலீசார் அவர்களை நேருவீதி, கேன்டின் வீதி சந்திப்பு அருகே பேரிகார்டு அமைத்து தடுத்து நிறுத்தினர். அங்கு அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.‌அப்போது புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை ரத்து செய் வேண்டும்..

மின்சாரத்துறையை தனியார் மயமாக்காதே!..மின் கட்டணத்திற்கு மானியம் வழங்கிடு!..மின் கட்டண பில்களில் சர்சார்ஜ்களை நீக்கிடு!.. உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒரு கட்டத்தில் திடீரென பேரிகார்டுகளை தள்ளினர். மறுபுறம் போலீசார் பேரிகார்டுகளை தள்ளவிடாமல் தடுத்தனர்.இருப்பினும் போராட்டக்காரர்கள் அதிகமாக இருந்ததால் பேரிகார்டுகளை கீழே தள்ளி அவ்வழியாக முன்னேறினர். அப்பொழுது இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இந்த நிலையில் இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் சிவா, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தொண்டர்களை கைது செய்து வேனில் ஏற்ற முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது போராட்டக்காரர்களும், போலீசாரம் தள்ளுமுள்ளு ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்பான சூழல் காணப்பட்டது.

ஊர்வலத்தால் நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டத்தையொட்டி நகர பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

What do you think?

வானூர் பட்டாணுர் சுங்கச்சாவடியில் கட்டணம் குறைவு வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

புதுச்சேரி அகரம் அரசு ஆரம்ப பள்ளியில் பாடம் எடுக்க ஆசிரியர்கள் இல்லாததால் பெற்றோர்கள் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்ற சம்பவம்