in

மயிலாடுதுறையில் தேமுதிக சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் தேமுதிக சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 

மயிலாடுதுறையில் தேமுதிக சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் பொங்கல் திருநாளில் குடும்ப அட்டைகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்காததை கண்டித்தும் தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சீர்கேடுகளை கண்டித்தும் போதை மற்றும் கஞ்சா பழக்கத்தை தடுக்காததை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேமுதிக மயிலாடுதுறை மாவட்ட அவை தலைவர் கே. எஸ். கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் ஜே. ஜே. ராஜ்குமார், எம். கே. சாரங்கபாணி, சி.டி. பாண்டியன், கனிமொழி, மயிலாடுதுறை நகர செயலாளர் பண்ணை பாலு, ஒன்றிய செயலாளர் பாக்கம் சிவா உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கினார்கள்.

What do you think?

சாலை பாதுகாப்பு வார விழாவை ஒட்டி, இருசக்கர வாகன பேரணி

போராட்டம் நடத்து முயன்ற விவசாய சங்க தலைவருக்கு வீட்டுச் சிறை போலீசார் பாதுகாப்பு