in

மீத்தேன் திட்டம் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மீத்தேன் திட்டம் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

 

காவிரி டெல்டா மாவட்டங்களில் மராமத்து என்ற பெயரில் ஓஎன்ஜிசி நிறுவனம் துரப்பன பணிகளை மேற்கொள்வதை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி மீத்தேன் திட்டம் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் குத்தாலம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம். 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருந்து நிலையத்தில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உயிர்மை பொதுநலக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் ப.த ஆசை தம்பி தலைமையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கலந்துகொண்டு நோக்கவுரையாற்றினார் மராமத்து என்ற பெயரில் தொடர்ந்து எண்ணெய் துரப்பன பணிகளை ஓஎன்ஜிசி நிர்வாகம் மேற்கொள்வதை தடுத்து நிறுத்திட வேண்டும்

எண்ணெய் கிணறுகளுக்கு காலவரையறை செய்திட வேண்டும் எண்ணெய் கிணறுகள் பாதிப்புகள் குறித்து பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் அறிக்கையை வெளியிட வேண்டும்,

ஓஎன்ஜிசி நிர்வாகத்திற்கு துணை போகும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இயக்கங்களை சார்ந்தவர்கள் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.

What do you think?

குத்தாலம் அருகே கோனேரிராஜபுரம் உமா மகேஸ்வரர் கோயில் குளத்தில் 3 அடி உயரத்தில் சுமார் 350 கிலோ எடை கொண்ட சிலை கண்டெடுப்பு

சீர்காழி ஸ்ரீ சட்டை நாதர் சுவாமி கோயிலில் ஆடி மாத பிரதோஷம் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை