in

நாகையில் 6 ஒன்றியங்களில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

குறுவை சாகுபடி பொய்த்துப் போன நிலையில் விவசாய தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலையை உடனடியாக வழங்க கோரி நாகையில் 6 ஒன்றியங்களில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

பேட்டி: மாரிமுத்து, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்காத நிலையில் கடைமடை மாவட்டமான நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பொய்த்து போனது இதனால் கூலி தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர் இந்த நிலையில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் இன்று மாவட்டத்தில் நாகை திருமருகல் கீழ்வேளூர் கீழையூர் வேதாரண்யம் தலைஞாயிறு உள்ளிட்ட ஆறு ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக கீழையூர் ஒன்றியம் கடத்தெருவில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் பேரணியாக சென்று கீழையூர் ஒன்றிய அலுவலகம் முன்பு திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் குறுவை சாகுபடி இல்லாமல் வறுமையில் வாழும் விவசாய தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலையை உடனடியாக வழங்க வேண்டும் ஆறு வாய்க்கால் குளங்களை பழைய முறைப்படி தூர்வாரிட வேண்டும், கோயில் மடம் புறம்போக்கு போன்ற இடங்களில் குடியிருந்த வரும் குடும்பங்களுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும், கலைஞரின் கனவு இல்லத்தை கூரை வீட்டில் குடியிருக்கும் அனைவருக்கும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு செல்வம் விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஒன்றிய தலைவர் பக்கிரிசாமி செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் பங்கேற்றனர். 100 நாள் வேலையை விரைவில் தொடங்கவில்லை எனில் வரும் 9ம் தேதி அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு

What do you think?

முசிறி தலைமையாசிரியர் கலந்தாய்வில் முறைகேடு – டிட்டோ ஜாக் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்பாட்டம்

இன்றைய வானிலை அறிக்கை | Today Weather Report 01.07.2024 | Today Weather News