in

கட்டுமான தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பில் கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


Watch – YouTube Click

கட்டுமான தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பில் கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 

தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகில் அகில இந்திய கட்டுனர் சங்கம் , தஞ்சாவூர் மையம் கட்டுமான பொறியாளர்கள் சங்கம், தஞ்சாவூர் & திருவையாறு அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் இணைந்து கட்டுமான பொருட்களான M. சாண்ட், P. சாண்ட் மற்றும் ஜல்லி வகைகள் ஆகியவைகளின் தொடர் விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்த போராட்டமும் செய்தனர்.

மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோசம் எழுப்பி அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து பேட்டியளித்த அய்யப்பன் மாநில தலைவர் அகில இந்திய இன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் கட்டுமான பொருட்கள் விலை 6 மாத காலமாக உயர்வால் தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் தவிக்கிறோம்.

கட்டுமான பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும்.

அரசு ஒழுங்கு முறை ஆணையம் அவசியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

40 லட்சம் மதிப்பிலான நிலத்தை பள்ளிக்கு வழங்கியவருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

திண்டிவனம் அடுத்த கொள்ளாரில் சட்ட விழிப்புணர்வு முகாம்