in

பருத்தி பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


Watch – YouTube Click

திருவாரூர் அருகே மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே பத்தூர் உதவி வேளாண்மை இயக்குநர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பிரதான கோரிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கோடை சாகுபடி செய்யப்பட்ட பருத்தி,நெல், எள் பயிர்கள் கடுமையாக சேதமடைந்தது. இதுகுறித்து தமிழக அரசு உரிய கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது இதன்படி நடத்தப்பட்ட கணக்கெடுப்பு சரிவர எடுக்க வில்லை எனவும் மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் நல சங்கத்தின் மாநில தலைவர் சேதுராமன், செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Watch – YouTube Click

What do you think?

அந்தியோதயா விரைவு ரயிலில் பயணிகளிடம் பயணச் சிட்டை சோதனை செய்த போலி டி.டி.ஆர் கைது

ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வற்புறுத்தி திண்டுக்கல் ரயில்வே ஜங்ஷனை முற்றுகை