அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
செஞ்சி வட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் துவக்கமாக மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவையொட்டி அவருக்கு ஐந்து நிமிடம் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆர்ப்பாட்டத்தை துவக்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் பணி நிரந்தரம் செய்ய கோரியும் ஓய்வூதியம் வழங்க கோரியும் ஓய்வு பெறும் நாளில் அரசு அறிவித்த சலுகைகளை வழங்க கோரிக்கையும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்க விழுப்புரம் மாவட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் மலர்விழி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கம் முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் பார்த்திபன் கோஷங்கள் எழுப்பி சிறப்புரையாற்றினார்,
ஆர்ப்பாட்டத்தில் செஞ்சி வட்டார அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள், துணைத் தலைவர் காமாட்சி, செயலாளர் ஆயிஷாபேகம், துணை செயலாளர் நித்யா, பொருளாளர் சாரதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக வட்டாரத் தலைவர் ராதா அனைவருக்கும் நன்றி கூறினார்..