in

நாகையில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூண்டியில் மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து; பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க கோரியும்; வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண வழங்க கோரியும் நாகையில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பொங்கல் பரிசுத்தொகுப்பு ரூபாய் ஆயிரம் வழங்க கோரியும், பெண்களுக்கு மாணவிகளுக்கும் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், தமிழக முழுதும் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்த வலியுறுத்தியும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், போதை மற்றும் கஞ்சா இல்லாத தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வருகிறது அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் கடைத்தெருவில் தேமுதிக மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து திருப்பூண்டி கடைத்தெருவில் 65 மதிக்கத்தக்க மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டன எதிர்ப்பை பதிவு செய்து தமிழக அரசை கண்டித்து கண்டனம் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து ஏழை எளியவர்களுக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் நினைவாக மதிய உணவு வழங்கப்பட்டது.

What do you think?

மதகஜ ராஜா நிகழ்ச்சியில் வாய் குழறி பேச நடுங்கிய விஷால், ரசிகர்கள் கவலை

நாகையில் நான்கு வயது குழந்தை மழலை குரலில் தமிழ்த்தாய் வாழ்த்து தேசிய கீதம், பாடும் வீடியோ வைரல்