in ,

மதுரையில் தேமுதிக சார்பாக மின்சார கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரையில் தேமுதிக சார்பாக மின்சார கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

 

மதுரையில் தேமுதிக ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக மின்சார கட்டண உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு திருமலை நாயக்கர் சிலை முன்பு மதுரை தேமுதிக ஒருங்கிணைந்த மாவட்ட கழகம் சார்பாக மாநகர தெற்கு மாவட்ட கழக செயலாளர் முத்துப்பட்டி மணிகண்டன் அவர்களின் தலைமையில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வு மற்றும் தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்காத கர்நாடகா அரசை கண்டித்தும் நியாய விலை கடைகளில் சில மாதமாக பருப்பு பாமாயில் அரிசி போன்ற பொருட்களை நிறுத்தி வைத்திருந்தாதக கூறி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தேமுதிக கழக வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் பாக்கிய செல்வராஜ் மற்றும் கழக உயிர் மட்ட குழு உறுப்பினர் பாலன், மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பாலச்சந்தர், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் கணபதி, கழகத் தேர்தல் செயலாளர் அழகர்சாமி, இளைஞர் அணி துணைச் செயலாளர் பார்த்திபன், தொழிற்சங்க பேரவை பொருளாளர் புதூர் பூபதி, தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் அரவிந்தன், மாநகர் மாவட்ட துணை செயலாளர் மாணிக்கவாசகம் மற்றும் எஸ்வின் பாபு, ஆரப்பாளையம் பகுதி செயலாளர் தனபால் வரவேற்பு உரையாற்றினார் மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த கழக நிர்வாகிகள், மகளிர் அணி மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் உரையுடன் 31ஆம் தேதி சட்டசபையில் கூடுகிறது சபாநாயகர் செல்வம் பேட்டி

திண்டிவனம் ஒலக்கூர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய துவஜாரோஹணம்