in

தமிழக அரசைக் கண்டித்து குண்டாறு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக அரசைக் கண்டித்து குண்டாறு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

 

காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு தமிழக அரசைக் கண்டித்து காவிரி வைகை கிருதுமால் குண்டாறு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு காவிரி வைகை கிருதுமால் குண்டாறு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்திட தவறிய மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ராம்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

காரியாபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் காட்டுப்பன்றிகளால் சேதப்படுத்தப்பட்ட அனைத்து வகைப் பயிர்களுக்கும் ஏக்கருக்கு ரூ.40ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் பேசுகையில், காரியாபட்டி, திருச்சுழி மற்றும் நரிக்குடி ஒன்றியங்களில் காட்டுப் பன்றிகளால் சேதமடைந்த பயிர்களை முறையாக கணக்கெடுத்து ஏக்கருக்கு ரூ.40ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் காவிரி வைகை கிருதுமால் குண்டாறு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சிவகங்கை வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் தமிழகம் முழுவதும், அரசுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் இரண்டு அமைச்சர்கள் விருதுநகர் மாவட்டத்தில் இருந்தும் விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசைக் கண்டித்து விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காரியாபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

What do you think?

வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு வளையல், மணி, சில்லுவட்டு பெண்கள் அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது

நாமக்கல் மோகனூர் பகவதி அம்மன் ஆலயத்தில் மார்கழி திருவிழா – பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்தி கடன்