in

அரசு மதுபான கடைகளை மூடக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவெறும்பூர் ஐடிஐ மற்றும் துவாக்குடி அரசு கலைக்கல்லூரி எதிரே செயல்படும் அரசு மதுபான கடைகளை மூடக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் துவாக்குடி அரசு கலைக் கல்லூரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அரசு ஐடிஐ மற்றும் துவாக்குடி அரசு கலைக் கல்லூரி அருகில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகளால் மாணவர்கள் மது பழக்கதிற்கு அடிமையாகும் சூழ்நிலை ஏற்படுவதால் அரசு மதுபானக்கடை மற்றும் பாரை உடனடியாக மூட வேண்டும்.
கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய அனைத்து மதுபான கடைகளை உடனடியாக மூட வலியுறுத்தி ஏற்கனவே மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாற்றினர்.

இதனைத் தொடர்ந்து இன்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் துவாக்குடி அரசு கலைக்கல்லூரி முன்பு அரசு கல்வி நிறுவனங்கள் அருகில் செயல்படக்கூடிய டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் துவாக்குடி அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் கையில் பதாதைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்.

இந்நிலையில் இந்தப் போராட்டத்திற்கு அரசு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டமும், பின்னர் வரும் 3ம் தேதி திருவெறும்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக இந்திய மாணவர் சங்க அமைப்பினர் தெரிவித்தனர்.

What do you think?

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி

மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சலின் தீவிரம் தேவையான சிகிச்சை அளிக்க தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டு