in

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நூதன முறையில் பிச்சை எடுக்கும் கண்டன ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நூதன முறையில் பிச்சை எடுக்கும் கண்டன ஆர்ப்பாட்டம்

 

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி பாமக சார்பில் நூதன முறையில் பிச்சை எடுக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மதுரை மாநகர் மாவட்ட பாமக சார்பில் மாவட்ட செயலாளர் எஸ் கே தேவர் தலைமையில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் பாமக மாநில பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் கண்டன உரையாற்றினார்.

திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து மக்கள் மீது பெரும் சுமையாக பல்வேறு வரிகளை உயர்த்தி மூன்று ஆண்டுகளாக மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி வரும் நிலையில் தற்போது மின்சார கட்டணம் உயர்வால் ஏழை எளிய நடுத்தர மக்கள் மற்றும் சிறுகுரு வியாபாரிகள் தொழில் நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் பலரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே தமிழக அரசு மின்சார கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட செயலாளர்கள் ராஜா, அழகர்சாமி, வீரக்குமார் சமூக நீதிப் பேரவை வழக்கறிஞர் ராஜ்குமார் மற்றும் மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட இளைஞர் அணி கார்த்திக் , ஷாஜீதீன் மற்றும் ஒன்றிய செயலாளர் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்களை எழுப்பினர் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பிச்சை எடுத்து மின் கட்டணம் செலுத்தும் வகையில் உள்ளது என வலியுறுத்தி நூதன பிச்சை எடுக்கும் போராட்டமும் நடைபெற்றது.

What do you think?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவை முடிச்சிப்போட்டு பார்க்க வேண்டாம் அமைச்சர் ரகுபதி ஆவேசம்

கர்ப்பிணிப் பெண்ணை அரிய வகை நோயிலிருந்து காப்பாற்றிய மதுரை மருத்துவர்கள்