திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தணிக்கை சான்றிதழ் வழங்க தாமதப்படுத்தும் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குனரை கண்டித்து பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவை ஆளுநர் மாளிகையில் நடத்த கோரி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் ஆசிரியரல்லா பணியாளர்கள் 350 க்கும் மேற்பட்டோர், தமிழக அரசால் அமைக்கப்பட்ட முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் கமிட்டி அறிக்கையின் அடிப்படையிலும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரிலும் தமிழக அரசின் நிதி குழு முடிவின்படியும் சென்னை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் பெற்று வருவதை அடிப்படையில் ஊதியம் பெற்று வரும் நிலையில், தமிழக அரசின் நிதி குழு முடிவின்படி 2017 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் தமிழக அரசின் விதியின் கீழ் ஊதியம் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் 300 க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பணப்பயன் பெறுவதற்கான தணிக்கை சான்றிதழ் வழங்கிய உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குனர் முபாரக் அலி, தற்போது பணி ஓய்வு பெற்றுள்ள 30 பேருக்கு கடந்த ஓராண்டு காலமாக தணிக்கைச் சான்றிதழ் வழங்க மறுப்பதால் , அவர்கள் ஓய்வூதிய பண பலன்களை பெற முடியாமல் தொடர்ந்து அலைகழிக்கப்பட்டு வருகிறார்கள். பல்கலைக்கழக பாரதிதாசன் பல்கலைக்கழக சட்ட விதிகளின்படி சென்னை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு இணையாக பெற்று வரும் ஊதியத்திற்கு தமிழக அரசின் மேதகு ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்காக 07.09.2015 அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது
என தெரிவித்துள்ளார்கள் உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிராகவும் தமிழக அரசின் நிதி குழு முடிவுக்கு எதிராகவும் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி குழு தீர்மானத்திற்கு எதிராகவும் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குனர் மாநில உயர்மட்ட குழுவிற்கு மற்றும் தற்போதுள்ள பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களின் ஊதியத்தை குறைக்க வேண்டும் என்ற உள் நோக்கத்தோடு கடிதம் எழுதி உள்ளதாகவும், இதனால் தங்களின் ஊதியத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அவ்வாறு பாதிப்பு ஏற்பட்டால் 450 பணியாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.
ஏற்கனவே நீதிமன்றத்தை முறையிட்டும், தமிழக அரசின் ஒப்புதலின் அடிப்படையில் ஊதியம் பெற்று வரும் தங்களை வேண்டுமென்றே ஊதியத்தை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் உதவி இயக்குனர் செயல்படுவதாக குற்றம் சாட்டி பல்கலைக்கழக அலுவலகம் முன்பு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருச்சி ஆர்டிஓ அருள் திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாசம் மற்றும் நவல்பட்டு காவல் ஆய்வாளர் நிக்சன் ஆகியோர் தலைமையில் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது பின்னரும் இரவு ஒரு மணி வரை போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த மண்டல இணை இயக்குனர் ரேவதி அவர்கள் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியபோதும் உடன்பாடு எட்டப்படாததால் இன்று துணைவேந்தர் அலுவலகம் எதிரே சாமியான பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த போராட்டத்தில் துணை இயக்குனரை மாற்றவில்லை என்றால் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாகவும் பட்டமளிப்பு விழாவை ஆளுநர் மாளிகையில் நடத்திக் கொள்ளுமாறும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்