in

முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து தடையை மீறி பாமகவினர் ஆர்ப்பாட்டம் கைது

முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து தடையை மீறி பாமகவினர் ஆர்ப்பாட்டம் கைது. முதலமைச்சர் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாசுவை இழிவாக பேசிய முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட பாமகவினர் ஆட்சியர் அலுவலகம் அருகே தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து கைது செய்தனர்.திடீரென மாவட்ட செயலாளர் திலீப் குமார் தடையை மீறி சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.காவல் துறையினர் அவரை குண்டு கட்டாக தூக்கி காவல்துறை வாகனத்தில் ஏத்தினர்.தெற்கு மாவட்ட செயலாளர் திலீப் குமார் தலைமையில் திரண்ட பாமகவினர் தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து முழக்கங்கள் எழுப்பி முதலமைச்சர் மருத்துவர் ராமதாசு ஐயாவிடம் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் ஓயாது என எச்சரித்தனர்.

What do you think?

டாக்டர் ராமதாஸ் பற்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக கல்லணைக்கால்வாயில் திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.