in

புதுச்சேரியில் வேகமாக பரவி வரும் டெங்கு மலேரியா காய்ச்சல்

புதுச்சேரியில் வேகமாக பரவி வரும் டெங்கு மலேரியா காய்ச்சல்

புதுச்சேரியில் வேகமாக பரவி வரும் டெங்கு மலேரியா காய்ச்சல், அரசுத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ரங்கசாமி அவசர ஆலோசனை

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்.

மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் டெங்கு மலேரியா நோய் தற்போது புதுச்சேரியில் வேகமாக பரவி வருகிறது மேலும் டெங்கு காய்ச்சலுக்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் பரவாமல் இருக்க முதலமைச்சர் ரங்கசாமி அரசு துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

புதுச்சேரி வணிகவரித்துறை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நோய்களிலிருந்து மக்களை காக்கும் வகையிலும் மேலும் நோய்கள் பரவாமல் இருக்கும் வகையிலும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள நகராட்சி மற்றும் பஞ்சாயத்து பகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக தொடங்கப்பட வேண்டும் இந்த காய்ச்சல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 42 கிராமங்களில் கொசு மருந்து அடிக்கும் பணியை துவக்கப்பட்டது. இந்தப் பணியின் போது கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் மற்றும் ஊழியர்கள் வீடு வீடாக சென்று கொசு மருந்துகள் அடித்து டெங்கு மற்றும் மலேரியா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்களை கையில் வழங்கியும் அறிவுரைகளை வழங்கினர்.

மேலும் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய மாணவ மாணவிகளுக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர் இதில் உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.

What do you think?

விஜய் அரசியளுக்கு வந்தால்….சரிவு நிச்சயம்… நடிப்பை விட கூடாது… போஸ் வெங்கட்

பிம்ஸ் மருத்துவ கல்லூரியில்பட்டமளிப்பு விழா….