திமுகவை விமர்சித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு மண்டல தலைமை அஞ்சல் அதிகாரிகள் ஆளுநர் தமிழிசையிடம் ஸ்ரீ ராமஜென்மபூமி கோயில் திறப்பு நினைவு தபால்தலை மற்றும் தபால் தலைகள் அடங்கிய புத்தகப் பெட்டியை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், 12-ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். பயமில்லாமல் தேர்வு எழுத வேண்டும் என்றார்.
மேலும் தூத்துக்குடி குலசேகரன் பட்டினத்தில் பிரதமர் ராக்கெட் லாஞ்சு தளம் திறந்து வைத்தது மிக்க மகிழ்ச்சி என்றும், இன்னும் பல திட்டங்கள் தமிழகத்திற்கு கொண்டு வரவுள்ளார். தென் பகுதிக்கு பிரதமர் வந்ததை மகிழ்ச்சியாக உள்ளது என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் வருகையை தேர்தலுக்கு வருகிறார் என தமிழகத்தில் ஆள்பவர்கள் கூறுகின்றனர். இதை அரசியல் செய்வதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
திமுகவினர் தான் அரசியல் செய்கிறார் என்றும், திமுகவை சேர்ந்தவர்கள் சீன ராக்கெட்டை போட்டு விமர்சனம் பண்ணது ஏற்றுக்கொள்ள முடியாது. சீன ராக்கெட் விளம்பரத்தில் பிரதமரை தவிர ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் இருக்கிறார்கள். திமுக தொண்டர்களுக்கு எந்த உரிமையுமில்லை, எல்லாம் அவர்களே அனுபவிக்கிறார்கள் என கூறினார்..
மேலும் நமது நாட்டிற்கு நட்பாக இருக்கின்றீர்களா என்பதை தான் கேள்வி எழுப்பினர்.சீனா நாடு நம்முடன் நட்பா எதிரியா என்பது விவாதம் நடத்துவதற்கு முன்பு நம் நாட்டு உணர்வோடு நமது நாட்டு மக்களுடன் நட்பா இருக்கின்றீர்களா என்பதுதான் கேள்வி..சும்மா திராவிடம் திராவிடம் என்று சொல்லிக்கொண்டு தேசியத்தை உதாசீனப்படுத்துகின்றீர்கள் என்பது உள் உணர்வு வெளிப்படையாக தெரிகிறது…
மிகப்பெரிய ராக்கெட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. பல நாடுகள் இந்தியா உடைய ராக்கெட்டை பயன்படுத்த இருக்கின்றார்கள்.. ஆனால் நமது விளம்பரத்தில் சீனாவின் ராக்கெட்டை பயன்படுத்தினால் எப்படி..? நம் நாட்டின் விஞ்ஞானிகளை மதிக்கின்றீர்களா விண்வெளி விஞ்ஞானிகளை அடையாளம் கொடுத்தீர்களா.? அங்கீகாரம் கொடுத்தீர்களா.? இது விளம்பரம் என்று சொல்லிவிட்டு போயிட முடியாது….